மணிப்பூர் வன்முறையில் பாஜக எம்எல்ஏ உயிரிழப்பு
21 Feb 2026, 3:26 pm
<p><strong>மணிப்பூர் வன்முறையில் பாஜக எம்எல்ஏ உயிரிழப்பு</strong></p>
<p>புதுதில்லி, பிப். 21- பாஜகவின் வகுப்புவாத அரசியலால் மணிப்பூர் மாநிலம் 2023ஆம் ஆண்டு முதல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ஓராண்டு குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பின் மீண்டும் பாஜக ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஆனாலும் இன்னும் வன்முறை சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில், மணிப்பூர் வன்முறையில் படுகாயமடைந்த பாஜக எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2023ஆம் ஆண்டு மே மாதம் மெய்டெய் கும்பல் தாக்குதலில், குக்கி - ஜோ சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ வுங்சாகின் வால்டே (62) படுகாயமடைந்தார். மணிப்பூர் மருத்துவமனையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சையில் இருந்தார். இத்தகைய சூழலில், மேல் சிகிச்சைக்காக பிப்., 8ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து விமானம் மூலம் தில்லிக்கு அழைத்து வரப்பட்டார். குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வால்டே, கடந்த ஒரு வாரமாக வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், வெள்ளியன்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வால்டே உயிரிழப்பால் குக்கி - ஜோ சமூகத்தினருக்கும், மெய்டெய் சமூகத்தினருக்கும் மீண்டும் மோதல் போக்கு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.</p>
