பாஜகவின் ‘மிஸ்டு கால்’ பாசம் மொடக்குறிச்சி வாக்காளர்கள் புலம்பல்
9 Apr 2026, 5:30 am

பாஜகவின் ‘மிஸ்டு கால்’ பாசம் மொடக்குறிச்சி வாக்காளர்கள் புலம்பல்

சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கிறதோ இல்லையோ, மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி வாக்காளர்களின் செல்போன்கள் மட்டும் அனல் பறக்கின்றன. காரணம், பாஜகவினரின் காட்டும் அதித “பாசம்”.

திமுக அரசு கொண்டு வந்த ‘மக்களிடம் செல்வோம்’ போன்ற திட்டங்களில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க மனுக்களை கொடுத்தார்கள். அந்த மனுக்கள் பாஜக தேர்தல் அலுவலகங்களில் ‘பிட்டா’ காக ஆக உள்ளது. மனு கொடுத்தவர்களை எந்தக் கட்சிக்காரர்கள் என்று கூடப் பார்க்காமல், எதிர்க்கட்சிப் பிரமுகர்களுக்கே போன் போட்டு, “நீங்கள் மனு கொடுத்தீர்களா? உங்கள் குறைகளைத் தீர்க்க எங்கள் வேட்பாளர் வந்து பாருங்கள்” என பாஜகவினர் அழைத்து வருகிறார்கள்.

சுபஸ்ரீயும் தான் கட்சி நிர்வாகி என்று தெரிந்தும், “வேட்பாளரைப் பாருங்கள் தீர்வு கிடைக்கும்” என அடம் பிடிப்பதுதான் வேடிக்கையின் உச்சம். மொடக்குறிச்சியில் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருப்பவரே பாஜகவை சேர்ந்தவர்தான் (சரஸ்வதி). அவர் பதவியில் இருந்தபோது தீர்க்கப்படாத குறைகள், இப்போது அவரது மருமகன் வேட்பாளராக வந்தவுடன் ‘மேஜிக்’ செய்தது போல தீர்ந்துவிடுமாம்! “மாமியார் செய்யாததை மருமகன் செய்வார்” என்கிற ரேஞ்சுக்கு இருக்கிறது இவர்களது வாக்குறுதி.