தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜகவின் ‘மிஸ்டு கால்’ பாசம் மொடக்குறிச்சி வாக்காளர்கள் புலம்பல்

9 Apr 2026, 5:30 am
பாஜகவின் ‘மிஸ்டு கால்’ பாசம் மொடக்குறிச்சி வாக்காளர்கள் புலம்பல்

பாஜகவின் ‘மிஸ்டு கால்’ பாசம் மொடக்குறிச்சி வாக்காளர்கள் புலம்பல்

சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கிறதோ இல்லையோ, மொடக்குறிச்சி மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி வாக்காளர்களின் செல்போன்கள் மட்டும் அனல் பறக்கின்றன. காரணம், பாஜகவினர் காட்டும் அதீத “பாசம்”.

திமுக அரசு கொண்டு வந்த ‘மக்களிடம் செல்வோம்’ போன்ற திட்டங்களில், பொதுமக்கள் தங்கள் குறைகளைத் தீர்க்க மனுக்களை கொடுத்தார்கள். அந்த மனுக்கள் பாஜக தேர்தல் அலுவலகங்களில் ‘பிட்டா’கப் போய் ஆக உள்ளது. மனு கொடுத்தவர்களை எந்தக் கட்சிக்காரர்கள் என்று கூடப் பார்க்காமல், எதிர்க்கட்சிப் பிரமுகர்களுக்கே போன் போட்டு, “நீங்கள் மனு கொடுத்தீர்களா? உங்கள் குறைகளைத் தீர்க்க எங்கள் வேட்பாளர் வந்து பாருங்கள்” என பாஜகவினர் அழைத்து வருகிறார்கள்.

மொடக்குறிச்சியில் தற்போதைய எம்.எல்.ஏ-வாக இருப்பவரே பாஜகவை சேர்ந்தவர்தான் (சரஸ்வதி). அவர் பதவியில் இருந்தபோது தீர்க்கப்படாத குறைகள், இப்போது அவரது மனுக்கள் வேட்பாளராக வந்தவுடன் ‘மேஜிக்’ செய்தது போல தீர்ந்துவிடுமாம்! “மணியார் செய்யாததை மருமகர் செய்வார்” என்கிற ரேஞ்சுக்கு இருக்கிறது இவர்களது வாக்குறுதி.

இது ஒருபுறமிருக்க, அருகிலுள்ள ஈரோடு மேற்கு தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் தாமரை வேட்பாளரும் இதே ‘டெக்னிக்கை’ கையில் எடுத்துள்ளார். “நாங்களும் அதே குட்டுதான்” என, இப்போது மனு கொடுத்தவர்களை விடாமல் துரத்தி துரத்தி போன் போட்டு டார்ச்சர் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

“மனு கொடுத்த மக்கள் ஓட்டு போடுவார்களோ இல்லையோ, இந்த போன் கால் தொல்லையிலிருந்து தப்பிக்க செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்” என்பதே தற்போதைய கள யதார்த்தம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.