தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் துல்லிய தாக்குதல் நடத்துவாராம்! இடதுசாரி மாணவர் அமைப்புகளை மிரட்டும் மேற்கு வங்க பாஜக அமைச்சர்

21 Aug 2026, 8:28 pm
ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் துல்லிய தாக்குதல் நடத்துவாராம்! இடதுசாரி மாணவர் அமைப்புகளை மிரட்டும் மேற்கு வங்க பாஜக அமைச்சர்

ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் துல்லிய தாக்குதல் நடத்துவாராம்! இடதுசாரி மாணவர் அமைப்புகளை மிரட்டும் மேற்கு வங்க பாஜக அமைச்சர்

கொல்கத்தாபாஜக ஆளும் மேற்குவங்க மாநிலத்தின் கொல் கத்தா மாவட்டத்தில் உள் ளது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம். நாட்டின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான இந்த பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமையன்று இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ), டிஎஸ்ஓ மற்றும் டிஎஸ்எப் உள்ளிட்ட இடதுசாரி மாணவர் சங்கம் சார்பில், பொறியியல் துறை மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென இந்தக் கூட்டத்திற்குள் அடாவடியாக புகுந்த ஆர்எஸ்எஸ் - பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி குண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பதிலுக்கு இடதுசாரி மாணவ தலைவர்கள், மாணவர்கள் பதிலடி கொடுக்க, சம்பவ இடத்திலிருந்து ஏபிவிபி குண்டர்கள் ஓட்டம் பிடித்தனர். அதிகாலையில் தாக்குதல்மீண்டும் வியாழனன்று அதிகாலை பாஜக எம்எல்ஏ சர்பாரி முகர்ஜி தலைமையில் (?) பல்கலைக் கழகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே நுழைந்த ஏபிவிபி குண் டர்கள் இடதுசாரி மாணவர் சங்க அறைகளையும், விடுதிகளையும் சேதப்படுத்தி,எஸ்எப்ஐ-யின் வெண்கொடிகளுக்கு தீவைத்தனர். மேலும், வியாழனன்று மாலையும் இந்திய மாணவர் சங்க தலைவர் கள் மீது ஏபிவிபி குண்டர்கள் வெளியாட்களை அழைத்து வந்து, தாக்குதல் நடத்த முயன்றனர்.

இந்நிலையில், வெள்ளியன்று பாஜக மூத்த தலைவரும், மேற்கு வங்க ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான திலீப் கோஷ், “ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்தில் துல்லிய தாக்குதல் நடத்துவோம்” என இடதுசாரி மாணவர் அமைப்புகளுக்கு மிரட்டல் விடுத் துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறுகையில், ”முந்தைய திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் பல ஆண்டுகளாக தேசத்துரோக நடவடிக்கைகளை வளர்த்துவந்தது. அப்போது யாரும் கண்டிக்கத் துணியவில்லை

ஆனால் எங்களது கட்சித் தொண் டர்கள் (ஏபிவிபி) வளாகத்திற்குள் தேசத்துரோக நடவடிக்கைகளுக்கு எதிராகதுல்லியத் தாக்குதல்கள் ஒடுக்கப்பட்டன. தற்போது மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் பல்கலைக் கழக வளாகத்தில் தேசத்துரோக நடவடிக்கைகளை வளர்க்க விட மாட் டோம். அதனால்தான் புதனன்று எங் களது கட்சித் தொண்டர்கள் தாக்குதல் தொடுத்தனர். இத்தகைய நடவடிக்கைகளையும் வளாகத்திற்குள் ளேயே உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் அவர்களைக் கேட்டுக்கொண்டோம்.

இனிமேலும் அங்கே தேசத்துரோக இயக்கங்கள் காணப் பட்டாலோ அல்லது தேசத்துரோக முழக்கங்கள் மீண்டும் எழுப்பப் பட்டாலோ, ஜாதவ்பூர் பல்கலைக் கழக வளாகத்தில் மீண்டும் துல்லியத் தாக்குதல்கள் நடத்தப்படும்” என்று மாணவர்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

பாசிசத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவோம்: எஸ்எப்ஐ

ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் பாசிசத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடுவோம் என இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எப்ஐ) மத்தியக்குழு அறைகூவல் விடுத் துள்ளது.

பிணைக்கைதிகளாக மாணவர்கள்

இதுதொடர்பாக எஸ்எப்ஐ அகில இந்திய தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி, பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச் சார்யா விடுத்துள்ள அறிக்கையில்,”ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ்-பாஜக-ஏபிவிபி குண்டர்களால் நடத் தப்பட்ட தாக்குதலுக்கு எதிரான கோபம் அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்குள்பொறியியல் துறை மாணவர் களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஏபிவிபி குண்டர்கள் கூட்டத்தைசீர குலைப்பதற்கு நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். ஏபிவிபியின் இத்தகைய அராஜகத்தை மாணவர்கள் ஒன்றிணைந்து எதிர்க்கத் தொடங்கியபோது, பாஜக எம்எல்ஏதலைமையில் உள்ளூர் இந்துத்துவா குண் டர்கள் வளாகத்திற்குள் நுழைந்தனர். பாஜக குண்டர்கள் பல்கலைக்கழக வளாகத்தை அடித்து நொறுக்கியது மட்டுமின்றி, இடதுசாரி அமைப்புகளின் கொடிகளுக்கு தீ வைத்ததுடன், மாணவர்கள் மீது உடல் ரீதியாக தாக்குதல் நடத்த முயன்றனர். இந்த முழுத் தாக்குதலும் நடத்தப்பட்டபோது பல மாணவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டனர்.

காவல்துறையினர் வேடிக்கை

துணைவேந்தர் உள்ளிட்ட ஜாதவ்பூர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் பங்கு ஒட்டுமொத்த நேரத்திலும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. காவல் துறையினர் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததுடன், குழப்பத்தைக் கையாள்வதிலோ அல்லது மாணவர்களைப் பாதுகாப்பதிலோ தலையிடவில்லை. மாணவர்கள் காவல்துறை உதவியை நாடியபோது, சம்பந் தப்பட்ட அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்கவில்லை.

ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஆர்எஸ்எஸ்-பாஜக-ஏபிவிபி குண்டர்கள் கட்டவிழ்த்துவிட்ட தாக்கு

தலை எஸ்எப்ஐ வன்மையாகக் கண்டிக்கிறது. அமைதியான பல்கலைக்கழக இடங்களைச் சிதைக்கும் எந்தவொரு முயற்சியை கண்டுகொள்ளாமல் இருக்க மாட்டோம். ஜனநாயகத்தை அழிக்கச் செய் யப்படும் இத்தகைய பாசிசத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்களுடன் எஸ்எப்ஐ தோளோடு தோள் கோர்த்து நிற்கிறது. ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில்வெறுப் புக்கும், வன்முறைக்கும், வகுப்புவாதத்திற்கும் இடமில்லை” என அதில் கூறப்பட் டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.