கரப்பான் பூச்சிகளை பிடிக்க சாக்கடையோரம் முகாமிட்டுள்ள பாஜக நிர்வாகிகள்
28 May 2026, 9:35 pm
<p><strong>கரப்பான் பூச்சிகளை பிடிக்க சாக்கடையோரம் முகாமிட்டுள்ள பாஜக நிர்வாகிகள்</strong></p><p>‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ இணையத்தில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை பின்னு க்குத் தள்ளி குறுகிய காலத்தில் பிரபல மாகி உள்ளது. முடக்கியும், ஹேக் செய்தும் கரப்பான் பூச்சி கட்சியை ஒடுக்க முடியாமல் ஒன்றிய பாஜக அரசு கடுமையாக திணறி வருகிறது. நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உதய மாகி (சமூக வலைதள கணக்குகள் மூலம்) வருவதாலும், பல இடங்களில் போராட்டம் - பேரணி நடைபெற்று வரு வதாலும் இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என்று தெரியாமல் மோடி அரசு விழித்து வருகிறது. இந்நிலையில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அழிக்கிறோம் என்ற பெய ரில் சாக்கடையோரம் பாஜகவினர் முகா மிட்டுள்ளனர். அங்கு கிடைக்கும் கரப்பான் பூச்சிகளை (உண்மையான பூச்சி) பிடித்து வந்து, அதனை ஒரு இடத்தில் போட்டு, பூச்சிகளை அடித்து கொன்று, கரப்பான் பூச்சிகளை கொன்று விட்டோம் என பாஜகவினர் ஷூட்டிங் வீடியோக்களை வெளியிட்டு கூப்பாடு போட்டு வருகின்றனர்.</p>
