முந்தய பக்கம்

ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் காரை மறித்து பாஜகவினர் ரகளை

29 Mar 2026, 3:34 pm
ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் காரை மறித்து பாஜகவினர் ரகளை
<p><strong>ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் காரை மறித்து பாஜகவினர் ரகளை</strong></p> <p>பழனி, மார்ச் 29- &nbsp; திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டுமென ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் கார் முன் அமர்ந்து பாஜகவினர் ரகளை செய்தனர். பழனி தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பாஜகவினர் பாஜக அலுவலகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு முற்றுகையிட்டனர். சாலையில் தேங்காய் உடைத்தும், மேலிடத்தை கண்டித்தும் கூச்சலிட்டனர். இந்நிலையில், ஞாயிறன்று திருப்பூரில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒன்றிய &nbsp;இணையமைச்சர் எல்.முருகன் பழனி கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது காரை முற்றுகையிட்டு பாஜகவுக்கு பழனி தொகுதி ஒதுக்க வேண்டும் எனவும், மேலிடத்திடம் உடனடியாக வற்புறுத்தி பெற்று தருமாறும் பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர். செய்வதறியாது திகைத்து நின்ற எல்.முருகன், சமாதானம் செய்துவிட்டு விரைந்து இடத்தை காலி செய்துவிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram