தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக என்றால் பொய்; பொய் என்றால் பாஜக

11 Dec 2025, 5:47 pm
பாஜக என்றால் பொய்; பொய் என்றால் பாஜக
<p><strong>பாஜக என்றால் பொய்; பொய் என்றால் பாஜக</strong></p> <p>கோவை, டிச.11 - &ldquo;பாஜக என்றால் பொய்&hellip; பொய் என்றால் பாஜகதான், இந்த கொடுமைக் காரர்களை பார்த்தால் பாரதி அழுது விடுவார் என்று தமிழிசை பேச்சுக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பதிலடி கொடுத்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற ஐந்து துறைகள் சார்ந்த கண்காட்சியை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வியாழ னன்று தொடங்கி வைத்து, கண்காட் சியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந் தித்த அவர், &ldquo;பாரதி இருந்திருந்தால் மோடியை போற்றி பாடியிருப்பார் என்று தமிழிசை கூறியிருக்கிறார். ஆனால், பாரதியார் பாடியது வேறு. வேதியர் ஆயினும் ஒன்றே. இங்கு வேறு குலத்தவராயினும் ஒன்றே. இங்கு அது நடக்கிறதா? அந்த தர்மம் இந்த தர்மம் எனக் கூறி பெண்களை வீட்டில் அடைக்க பார்க்கிறீர்கள். &lsquo;தனி ஒரு மனிதனுக்கு உண வில்லை எனில் ஜகத்தினை அழித்திடு வோம்&rsquo; என்றவர் பாரதி. இந்த கொடு மைக்காரர்களை பார்த்தால் பாரதி அழுதுவிடுவார். இவர்களை பாடவும் &nbsp;மாட்டார், பாராட்டவும் மாட்டார். பாஜக வினர் என்ன செய்ய வேண்டும் என்பதை பாரதி ஏற்கனவே பாடி வைத்துள்ளார். தமிழிசை போன்றவர்களுக்கு இதை பார்க்கச் சொல்லி, படித்து சொல்லி, மோடியிடம் போய் சொல்லச் சொல்ல வேண்டும். &lsquo;மத வேறுபாடு போன்ற மடமையை கொளுத்த வேண்டும்&rsquo; என்று தான் பாரதி பாடியுள்ளார். நாட்டில் உள்ள பசி, பட்டினி, படிக்க முடியாத பிள்ளைகள், கஷ்டத்தில் இருக் கும் விவசாயிகள் போன்றவற்றை பேசி விவாத பொருளாக கொண்டு வர வேண்டும் என்றும், இதையெல்லாம் விட்டுவிட்டு விளக்கு கொளுத்த வேண் டும் என்கிறார்கள் என்றும் அவர் காட்ட மாக பேசினார். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேசிய அவர், &ldquo;பாஜக என்றால் பொய்&hellip; பொய் என்றால் பாஜக... பொய் மூட்டைகளை உருட்டி விட்டார்கள். அவை உருளவில்லை. திருப்பரங்குன் றத்தில் காலம் காலமாக முறைப்படி வைப்பது போல தீபம் வைத்துவிட்டார் கள். மக்கள் பார்த்து விட்டார்கள். எல்லா மக்களும் திருப்தியாக இருக்கிறார்கள். &nbsp;பாஜகவினர் அரசியல் செய்வதற்காக பிரச்சனை செய்ய முயற்சித்தார்கள். தீபமே ஏற்றவில்லை என கூறிய பொய்யை அம்பலப்படுத்த வேண்டும்&rdquo; என்று கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.