தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராமரை 'வாக்கு' கேட்க வைத்த பாஜக! தமிழக மக்களின் ஞாபக சக்திக்கு ஒரு சவால்!

9 Apr 2026, 5:30 am
ராமரை 'வாக்கு' கேட்க வைத்த பாஜக! தமிழக மக்களின் ஞாபக சக்திக்கு ஒரு சவால்!

ராமரை 'வாக்கு' கேட்க வைத்த பாஜக! தமிழக மக்களின் ஞாபக சக்திக்கு ஒரு சவால்!

"சாப்பாட்டில் உப்புப் போட்டுச் சாப்பிடும் எவனும் பழைய நினைவுகள் மறக்காது" என்பார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டு மக்களின் ஞாபக சக்தியைச் சோதித்துப் பார்க்கத் தையலரி தங்கள் அப்புப்பொய்களைக் கலந்து விளம்பரம் கொடுக்கிறது பாஜக.

மத நம்பிக்கையா? மதவெறியா? இந்துக்கள் கடவுள் அவதாரமாகக் கருதும் ராமரை, வெறும் தேர்தல் மேடையாகப் போய் வீதி வீதியாக வாக்குக் கேட்கும் நிலைக்கு மலிவுப்படுத்தியதுதான் பாஜக-வின் ஆகச்சிறந்த 'ஆன்மிக' சாதனை.

'சனாதன தர்மம்' என்ற பெயரில் வர்ணாசிரமக் கொள்கைகளைத் திணிக்கப் பார்க்கும் இவர்கள், சைவத்திற்கும் வைணவத்திற்கும் இடையே இருந்த வரலாற்றுப் புண்களை மறைத்து, ஒரு 'இந்து' மதப் போர்வைக் குள் அனைவரையும் அடைக்கப் பார்க்கிறார்கள்.

மக்களின் மத நம்பிக்கையைத் தேர்தல் நேரத்து முதலீடு யாக மாற்றி, அமைதிப் பூங்காவான தமிழகத்தைக் காட்டுமிராண்டி காலத்திற்கு இழுத்துச் செல்லத் துடிக்கிறது காவிக் கூட்டம்.

தமிழகத்தில் ஒரு 'அயோத்தி' கனவு! திருப்பூரிலும் தீபத்தைக் கையில் ஏந்தத் தீபமாக மலர்ந்து தவிப்பது முதல், ராமநவமி போன்ற பண்டிகைகளைப் பயன்படுத்திச் சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களைச் சிதைப்பது வரை இவர்களின் சூழ்ச்சித் திட்டம் மிகத் தெளிவானது.

அடிமைப் பழனிசாமியின் அட்சயம்! இப்படிப்பட்ட மக்கள் விரோத பாஜக-வை 'எட்டு' என்ற பெயரில் தலையில் தூக்கி வைத்து ஆட்டும் போலித்தனார் எடப்பாடி பழனி சாமி. பதவிக்காக அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்த பழனிசாமியை இந்தத் தமிழகம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மதவெறி மாண்புகள் கொண்ட இந்த மண், கலவரம் மூட்டு பவர்களையும் அவர்களுக்குக் கவரி வீசுபவர்களையும் வரும் சட்ட மன்றத் தேர்தலில் ஒரு கை பார்க்கும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்ட ணியின் வெற்றிதான், தமிழகத்தின் அமைதிக்குத் தரப்படும் ஒரே உத்தரவாதம்! - கே.வசந்தன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.