தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக இளைஞரணி நிர்வாகி மகன் நீட் வினாத்தாளுக்காக ரூ.10 லட்சம் கொடுத்தது அம்பலமானது

17 May 2026, 9:33 pm
பாஜக இளைஞரணி நிர்வாகி மகன்  நீட் வினாத்தாளுக்காக ரூ.10 லட்சம் கொடுத்தது அம்பலமானது

பாஜக இளைஞரணி நிர்வாகி மகன் நீட் வினாத்தாளுக்காக ரூ.10 லட்சம் கொடுத்தது அம்பலமானது

நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைது செய்யப்பட்ட, ராஜஸ்தானின் பாஜக இளைஞரணி நிர்வாகி தினேஷ் பிவா லின் மகன் ரிஷி பிவால் வினாத்தாளை பெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

இதற்காக ரூ.10 லட்சம் கொடுத்துள்ளார். நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக தினேஷ் பிவால் மற்றும் அவரது சகோ தரர் மங்கிலால் பிவால் ஆகியோரை சிபிஐ முன்னதாகவே கைது செய்தி ருந்தது.

மங்கிலாலின் மூத்த மகன் விகா ஸும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினேஷ் பிவாலின் மகன் ரிஷி பிவாலையும் சிபிஐ தேடி வரு கிறது.

அவர் தலைமறைவாக இருப்ப தாக விசாரணை அதிகாரிகள் கூறுகின்ற னர்.

தினேஷ் பிவால் தனது மகன் ரிஷி பிவாலுக்காக 10 லட்சம் ரூபாய்க்கு வினாத்தாளை வாங்கியதாக வாக்கு மூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பி டத்தக்கது.

துபாய் அபுதாபி அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக் கிய நகரான அபுதாபியில் உள்ள அணுமின் நிலையம் மீது ஞாயி றன்று திடீரென ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தப்பட்டுள் ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அபுதாபி அணு மின் நிலையம் மீது ட்ரான் தாக்குதல் எந்த நாடு என்பது தொடர்பாக ஞாயி றன்று இரவு 7 மணி வரை உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை. இ

ந்த தாக்குதலில் அணுமின் நிலை யத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அபுதாபி ஊடக அலு வலகம் சமூக ஊடகப் பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில்,”அல் தப்ரா பிராந்தி யத்தில் உள்ள பரக்கா அணுமின் நிலை யத்தின் உள் எல்லைக்கு வெளியே இருந்த ஒரு மின்சார ஜெனரேட்டரில், ட்ரோன் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தை அபுதாபி அதிகாரிகள் கை யாண்டனர்.

இச்சம்பவத்தில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் கதிரி யக்க பாதுகாப்பு அளவுகளிலும் எந்தப் பாதிப்பும் இல்லை” என்றும் அதில் சேர்க் கப்பட்டுள்ளது.

புதுதில்லி ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி கடும் சரிவு மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச்சூழல், இந்தியாவின் எரிசக்திப் போக்குவரத்தை மட்டுமன்றி, நாட்டின் மிக முக்கியமான வணிகத் துறையான ரத்தினங்கள், ஆப ரணங்கள் ஏற்றுமதியையும் கணிசமாகப் பாதித்துள்ளது.

அதாவது ஏற்றுமதி 9.07% குறைந்து, 2,226.45 மில்லியன் டால ராக (சுமார் ரூ.20,825.01 கோடி) வீழ்ச்சி யடைந்துள்ளது. கடந்த 2025ஆம் ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் இது 2,448.53 மில்லி யன் டாலராக (சுமார் ரூ.20,952.26 கோடி) இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஆபரணங்களின் முக்கிய சந்தையான அமெரிக்காவில் இறக்கு மதி வரிகள் குறித்த தெளிவான முடிவு இன்னும் வராததால் ஏற்றுமதி பாதிக்கப் பட்டுள்ளது. இந்த ஏற்றுமதிப் பாதிப்பை ஈடுகட்ட, 2026ஆம் ஆண்டில் உள்நாட்டு ஆபரண விற்பனையை 15% வரை அதி கரிக்க இந்திய ரத்தினங்கள், ஆபர ணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுமம் இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.