தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வெல்லம் கொடுத்துக் கொல்லும் பாஜக!

5 Mar 2026, 3:59 pm
வெல்லம் கொடுத்துக் கொல்லும் பாஜக!

வெல்லம் கொடுத்துக் கொல்லும் பாஜக!

இந்திய அரசியல் சாசனம் போற்றிப் பாது காக்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு இன்று மிகப் பெரிய ஆபத்து வந்துள்ளது. அது ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பதில் மட்டும் இல்லை; மாநி லக் கட்சிகளை மெல்ல அழித்து ‘ஒரே நாடு,  ஒரே கட்சி’ என்ற ஒற்றை அதிகார மையத்தை நோக்கி நகரும் பாரதிய ஜனதா கட்சியின் கபளீகர அரசியலில் ஒளிந்து கிடக்கிறது.

தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு, “வெல்லம் கொடுத்துக் கொல்லுதல்”என்று. அதற்கேற்ப பாஜகவினர் தொடக்கத்தில் ஒரு மாநிலக் கட்சியுடன் பணிவாகக் கூட்டணி அமைப்பார்கள். அந்த கூட்டணி மூலம் மாநி லத்தின் அரசியல் களத்தை அறிந்துகொள் வார்கள். பின்னர் அந்த மாநிலக் கட்சியின் வாக்கு வங்கியைத் தங்களது சித்தாந்தத்தால் மெல்ல அபகரிப்பார்கள். இறுதியாக, அந்த மாநி லக் கட்சியின் எம்.எல்.ஏ-க்களைப் பண பலத்தா லும் அதிகார மிரட்டலாலும் விலைக்கு வாங்கி, கூட்டணிக் கட்சியையே காலி செய்து, அந்த இடத்தில் தாமரையை ‘மலரச்’ செய்வார்கள்.

தற்போது பீகாரில் நிதிஷ் குமாருக்கு எதி ராக நடக்கும் நகர்வுகள் இதற்குச் சாட்சி. பல ஆண்டுகளாக பீகாரின் முகமாக இருந்த நிதிஷ் குமாரை முதல்வர் பதவியிலிருந்து அகற்றி, அவரைச் செயலற்றவராக்கும் முயற்சிகள் நடந்துள்ளன. நிதிஷ் குமாரின் ‘ஐக்கிய ஜனதா தளம்’ கட்சியைத் தலைமையற்ற கூடாரமாக்கி,  அந்த இடத்தில் ஆட்சியைப் தன்வசப்படுத்து வதுதான் பாஜகவின் திட்டம். இது வெறும் தலைமை மாற்றம் அல்ல; ஒரு மாநிலக் கட்சி யை தின்று செரிக்கும் பாஜகவின் ‘ஆக்டோ பஸ்’ அரசியல்.

ஏற்கெனவே அருணாச்சலப் பிரதேசத்தில் ‘அருணாச்சல் மக்கள் கட்சி’யின் 43 எம்.எல்.ஏ-க் களை விழுங்கி, அக்கட்சியையே பாஜகவாக மாற்றியது. இதேபோல் சிக்கிமில் 25 ஆண்டு கள் ஆட்சி செய்த ‘சிக்கிம் ஜனநாயக முன்னணி’ யின் 10 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி அந்தக் கட்சியைச் சீர்குலைத்தது. மகாராஷ்டி ராவில் நீண்ட கால கூட்டாளியான சிவசேனா வை உடைத்துச் சின்னத்தையே அபகரித்ததும், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் சிறிய கட்சித் தலைவர்களை விழுங்கி அரியணை ஏறியதும் பாஜகவின் அதிகாரப் பசிக்குச் சான்றுகள். ஹரி யானாவில் பன்சிலாலின் ஹரியானா விகாஸ் கட்சியும் பாஜகவின் வளர்ச்சிக்கு இரையானது. மொத்தத் தில் மாநிலக் கட்சிகளை ஏணியாகப் பயன் படுத்தி, ஏறிய பிறகு அந்த ஏணியையே தீயிட்டுக்  கொளுத்துவதுதான் பாஜகவின் பாணி.

இந்த ஆபத்தான அரசியல் சூழலில், தமிழ கத்தில் அதிமுக தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக, இன்று தனது தனித்துவத்தை இழந்து பாஜகவின் நிழலில் தஞ்சம் புகுந்திருப்பது தற்கொலைக்குச் சமமானது. அதிமுக தொண் டர்களுக்கு இப்போதேனும் புரிந்தால் சரி.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.