கொல்லைப்புறமாக நுழையத் துடிக்கும் பாஜக!
26 Mar 2026, 2:46 pm
<p><strong>கொல்லைப்புறமாக நுழையத் துடிக்கும் பாஜக!</strong></p>
<p>எஸ்.ஐ.ஆர் (SIR) மூலம் தமிழகத்தில் 90 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பத்திரம் மூலம் முதலாளிகளிடம் பல ஆயிரம் கோடிகளைச் சுருட்டிய ஊழலின் ஊற்றுக்கண்ணே பாஜகதான். இதற்கெ திராக வழக்குத் தொடர்ந்து உண்மையை வெளிக்கொண்டுவந்தது சிபிஎம் மட்டுமே! அதிமுகவின் முதுகில் ஆர்.எஸ்.எஸ் மகாராஷ்டிராவில் மாநிலக் கட்சிகளை உடைத்தது போல, தமிழகத்தில் அதிமுகவை விழுங்க ஆர்.எஸ்.எஸ் திட்டமிடுகிறது. தில்லியில்தான் அதிமுகவின் தொகுதிப் பங்கீடு நடக்கிறது. அதிமுக தொண்டர்களிடம் சங்பரிவார் கருத்துக்களைக் கொண்டுசேர்த்து, இந்துத்துவாவை நிலைநிறுத்துவதே இவர்களின் திட்டம். இதற்காகவே எடப்பாடி பழனிசாமி தனது முதல் வேட்பாளர் பதவியைக் கூட பாஜகவிடம் அடகுவைத்துள்ளார். தமிழகத்தின் எதிர்காலம் எங்கெல்லாம் கலவரம் நடக்கிறதோ, அங்கெல்லாம் பாஜக வென்றுள்ளது. அப்படியான ஒரு நெருப்பைத் தமிழகத்திலும் உருவாக்க சதி செய்கிறார்கள். தமிழகத்தின் எதிர்காலத்திற்காக இந்த மக்கள் விரோதக் கூட்டணியைத் தோற்கடிக்க வேண்டும்! தஞ்சாவூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்புப் பேரவை மற்றும் நிதி அளிப்பு நிகழ்ச்சியில், சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் கே. பாலபாரதி ஆற்றிய உரையில் இருந்து...</p>
