தீக்கதிர் விரைவு செய்திகள்
16 Dec 2025, 3:51 pm

சோனியா, ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது: முதலமைச்சர் கண்டனம்

சென்னை, டிச.16- அரசியலமைப்புச் சட்ட விழு மியங்களை உறுதியாக நம்பும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை பாஜக பழிவாங்குகிறது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு அமைப்புகள் மூலம் எதிர்க் கட்சிகளை குறிவைக்கும் பாஜக திட்டத்தை நீதித்துறை மீண்டும் அம்பலப் படுத்தியுள்ளது என்று முதலமைச் சர் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலை வர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தி துன்புறுத்தும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். பயமில்லாமல் உண்மையின் பக்கம் நின்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வென்றுள்ளனர் என்று முதலமைச்சர் பாராட்டினார். பழிவாங்கும் நோக்கத்தோடு ஒன்றிய அரசு செயல் படுவதால் புலனாய்வு அமைப்பு களின் நம்பகத்தன்மை அழிக்கப்படு கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டி னார். அரசியல்ரீதியில் எதிர்க்கட்சி களை அடக்குவதற்கு விசாரணை அமைப்புகளை தவறாக பயன் படுத்துவதாகவும் முதலமைச்சர் ஸ்டா லின் கண்டனம் தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு ஏற்ப முன்கூட்டியே மருத்துவ தேர்வுகள்

சென்னை, டிச.16 - தமிழகத்தில் மருத்துவ படிப்பு படிக்கக்கூடிய மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு வழக்கமாக ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி கடைசி வாரத்தில் முடிவடையும். இந்த நிலையில் படித்துக் கொண்டிருக்கக் கூடிய மாணவர்களுக்கான ஆண்டு இறுதி தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஏப்ரல் மாதத்திற்கு பதிலாக மார்ச் மாதத்தி லேயே இந்த தேர்வுகள் தொடங்கி, மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் வகையில் அட்டவணை வழங்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு மாதம் முன்கூட்டியே தேர்வு அட்ட வணை தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பதாக மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரி விக்கின்றன. அதன்படி மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி கடைசி வாரத்திற்குள்ளாக ஒட்டுமொத்த தேர்வுகளும் முடிவடைய இருக்கின்றன. தமிழகத்தில் சுமார் 50 மருத்துவக் கல்லூரிகளில் 25 ஆயிரம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கான தேர்வுகள் ஒரு மாதம் முன்கூட்டியே மார்ச் மாதம் தொடங்கி நிறைவடைய இருக்கிறது.

குடியரசுத் தலைவர் வேலூர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள்

தீவிரம் வேலூர், டிச.16 - வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் புதிய தியான மண்டபத்தைத் திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புதன்கிழமை (டிச.17) அன்று வருகிறார். தில்லியில் இருந்து தனி விமானத்தில் திருப்பதி வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீபுரம் வருகிறார். தியான மண்டபம் திறப்பு, சுவாமி தரிசனம், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று மதியம் 12.30 மணிக்கு திருப்பதி திரும்புகிறார். இதையொட்டி வேலூர் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தங்கக் கோவில் வளாகம் சிறப்பு பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களிலிருந்து சிறப்பு ஃபோம் டெண்டர் வாகனங்கள் இரண்டும், மேலும் ஆறு தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. 87 தீயணைப்பு வீரர்கள் பணியில் உள்ளனர். ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மதியம் 12.30 மணிக்குப் பிறகே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஸ்ரீபுரம் – ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொற்கோவில் மற்றும் சுற்றுப்புறங்கள் சிவப்பு பகுதியாக (ரெட் ஸோன்) அறிவிக்கப்பட்டுள்ளன. டிரோன் மற்றும் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி உத்தரவிட்டுள்ளார்.