தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தமிழ்நாட்டின் மீது வெறுப்பைக் கிளப்பும் பாஜக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

27 Dec 2025, 12:15 pm
தமிழ்நாட்டின் மீது வெறுப்பைக் கிளப்பும் பாஜக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
<p><strong>தமிழ்நாட்டின் மீது வெறுப்பைக் கிளப்பும் பாஜக! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு</strong></p> <p>திருவண்ணாமலை, டிச. 27 - திருவண்ணாமலையில் நடை பெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் &nbsp;வழங்கும் விழாவில் முதலமைச்சர் &nbsp;மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். &nbsp;அப்போது, தமிழ்நாட்டின் மீது &nbsp;வெறுப்புணர்ச்சியைப் பரப்பி, &nbsp;வட மாநிலங்களில் வாக்குகளைப் &nbsp;பெறுவதற்கு பாஜக முயற்சி செய் &nbsp;வதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர், &ldquo;நான்கரை ஆண்டு களில், திமுக அரசு பல திட்டங்களை நிறைவேற்றி யுள்ளதாக குறிப்பிட்டார். ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டியால் வரி உரிமை இல்லாமலும், வரவேண்டிய நிதி வழங்கப்படாமலும், குடைச்சல் கொடுக்கும் ஆளுநர் இருந்தும், தமிழ் &nbsp;நாட்டுக்கு உள்ளேயே இருந்து எதிராக செயல்படுகின்ற துரோகிகள் இருந்தும், அத்தனை சவால்களையும் முறி யடித்து முன்னேறியிருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். இந்த வளர்ச்சிதான் பலருடைய கண்களைக் கூசச் &nbsp;செய்வதாகவும், எப்படியாவது தமிழ்நாட்டிற்கு அவப் பெயரை ஏற்படுத்த வேண்டும் என்று பொறுப்புள்ள ஒன்றிய அமைச்சர்கள் கூட வெறுப்புணர்ச்சியை பரப்பு வதாகவும் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாட்டின் மீது வெறுப்புணர்ச்சியை பரப்பினால் &nbsp;வட மாநிலங்களில் வாக்குகள் பெற முடியும் என்று &nbsp;பாஜக நினைப்பதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் தெரிவித்தார். எந்த பொய்யையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை &nbsp;என்பதால் திராவிட மாடல் 2.0 அமைவது உறுதி என்றும் &nbsp;நம்பிக்கை தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.