பாஜக ஊழல் நிறைந்த கட்சி அஜித் பவார் கட்சி அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு
3 Dec 2025, 2:59 pm
<p><strong>பாஜக ஊழல் நிறைந்த கட்சி அஜித் பவார் கட்சி அமைச்சர் சரமாரி குற்றச்சாட்டு</strong></p>
<p>மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளார். துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவின் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் மாணிக்ராவ் கோகடே (தேசிய வாத காங்கிரஸ் - அஜித் பவாருக்கு நெருக்கமானவர்) பாஜக ஊழல் நிறைந்த கட்சி என்று குற்றம்சாட்டி யுள்ளார். சின்னார் பகுதியில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்தல் பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் கூறுகை யில், “உலகின் பெரிய கட்சி என்று பாஜக கூறிக்கொள்கிறது. ஆனால் முற்றிலும் ஊழல் நிறைந்த கட்சி பாஜக தான். குறிப்பாக குழப்பம் ஏற்படுத்துவதில் அக்கட்சி வல்லமை உடையது. பாஜக முதலில் என் சகோதரனை இழுத்துச் சென்று எங்கள் வீட்டை நாசமாக்கியது. இப்போது ஹேமந்த் வாஜே போர்வையில், ராஜாபாவ் வாஜேவின் வீட்டை (பாஜகவிற்கு இழுத்தது) நாசமாக்கியுள்ளனர். இந்த நாசவேலைகளால் பாஜக பயனடையப் போவதில்லை” என அவர் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கொண்டே பாஜகவை ஊழல் நிறைந்த கட்சி என்று தேசியவாத காங்கி ரஸ் (அஜித்) மூத்த தலைவர் மாணிக்ராவ் கோகடே கூறியுள்ளது மகாராஷ்டிரா அர சியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
