தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘தொழிலாளர்களை பயனாளிகளாக்கியது’ நம்ப வைத்து கழுத்தறுத்த ஒன்றிய பாஜக அரசு

4 Oct 2026, 1:26 am
‘தொழிலாளர்களை பயனாளிகளாக்கியது’  நம்ப வைத்து கழுத்தறுத்த ஒன்றிய பாஜக அரசு

‘தொழிலாளர்களை பயனாளிகளாக்கியது’ நம்ப வைத்து கழுத்தறுத்த ஒன்றிய பாஜக அரசு

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு முடக்க முயற்சிக்கிறது. 125 நாட்கள் வேலை வழங்கப்படும் என்று கூறி மக்களை நம்பவைத்து, கழுத்தறுக்கப் பார்க்கிறது.

நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவு வேலை செய்யவில்லை என்று கூறி, தினக்கூலியாக ரூ.30, ரூ.50 என வழங்கி மக்களை வஞ்சிக்கிறது. ஒரு தொழிலாளர் ஒரு நாளைக்கு 3 டன் அளவு மண் எடுக்க வேண்டும்; அப்படி எடுத்தால்தான் முழு கூலியான ரூ.336 கிடைக்கும் என்கிறார்கள். இந்த அளவு வேலையைச் செய்ய முடியாது என்று கூறி, மக்களாகவே திட்டத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மோடி அரசு மக்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது.

மேலும், பல இடங்களில் புறம்போக்கு நிலங்கள் இல்லை; இருக்கும் நிலங்களும் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் வேலை மறுக்கப்பட்டு, உள்ளூர் சமூகத்தில் குழப்பம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் போன்ற வட்டங்களில் தகுந்த வேலைவாய்ப்பின்றி கிராமப்புற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் 'விபிஜி ராம்ஜி' (VBG-RAMJI) போன்ற நடைமுறைகளைக் கை விட்டு, பழையபடி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படியான உரிமைகளைப் பெறும் வரை விவசாய தொழிலாளர் சங்கம் போராட்டத்தை வலுப்படுத்தி முன்னெடுக்கும்.

பொது விநியோகத் திட்டமும் (ரேஷன்) இப்போது கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசி, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் குறைக்கப்படும் என்று தொடங்கி, படிப்படியாகத் தகுதியுள்ள குடும்பம், தகுதியற்ற குடும்பம் எனப் பிரித்து மேய்ந்து சலுகைகளைச் சுருக்கப் பார்க்கிறார். இதன் மூலம் தமிழ்நாட்டில் 'அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம்' முடிவுக்கு வரும் அபாயம் உள்ளது.

கைரேகை, கருவிழி மற்றும் கதிரியக்கப் பதிவு செய்யும் முறையால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன. கதிரியக்க மறுபதிவு மற்றும் தரவு மேம்பாட்டுப் பணிகள்அனைத்தையும் அரசே இலவசமாக செய்ய வேண்டும் என்ற போராட்டத்தை விதொச முன்னெடுக்கும். பல காலம் போராடி, பல உயிர்களை பலி கொடுத்து பெற்ற ‘‘தொழிலாளர்கள்’’ என்கிற உரிமை இன்று பறிக்கப்பட்டு, தொழி லாளர்கள் வெறும் 'பயனாளிகள்' ஆக மாற்றப்பட்டுள்ளார்கள்.

1997-ஆம் ஆண்டு விவசாயத் தொழி லாளர்களுக்காக கோலப்பன் கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் இன்றுவரை வெளியிடப்படவில்லை. நம்முடைய விவசாய சங்க தலைவர்கள் ஜி. வீரையன், எஸ். திருநாவுக்கரசு ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றதால், அவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக 2000-ஆம் ஆண்டு 'வேளாண் தொழிலாளர் நல வாரியம்' தொடங்கப்பட்டது. ஆனால், அது இன்று 'முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்' என்ற பெயரில் செயல்பாடற்ற நிலை யில் உள்ளது.

ஒவ்வொரு கிராமப்புற விவசாயத் தொழி லாளரின் உரிமைகளும் வருவாய்த்துறை அலுவலர்களின் அதிகாரப்பிடியில் சிக்கிச் சீரழியும் அவலநிலை தொடர்கிறது. கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைவோம். போராட்ட மொழியில் ஆட்சியாளர்களுக்கு புரியவைப்போம் என்று, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (விதொச) திருவள்ளூர் மாவட்ட 8-வது மாநாடு அறைகூவி அழைக்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.