தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

12 ஆண்டுகளில் 48 புதிய சுங்கச்சாவடிகள் தமிழகத்தைச் சூறையாடும் பாஜக அரசு

20 Mar 2026, 2:55 pm
12 ஆண்டுகளில் 48 புதிய சுங்கச்சாவடிகள்  தமிழகத்தைச் சூறையாடும் பாஜக அரசு
<p><strong>12 ஆண்டுகளில் 48 புதிய சுங்கச்சாவடிகள் &nbsp;தமிழகத்தைச் சூறையாடும் பாஜக அரசு</strong></p> <p>புதுதில்லி, &nbsp;மார்ச் 20 - பாஜக அர சின் தவறான சாலைப் போக்கு வரத்து கொள் கைகளால் தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண் ணிக்கை அதிகரித்து, மக்களின் பாக்கெட் டுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் &nbsp;சுரண்டப்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் குற்றம் சாட்டியுள்ளார். சுங்கச்சாவடிகளின் வசூல் வேட்டை நாடாளுமன்றத்தில் ஆர். சச்சிதானந்தம் எழுப்பிய கேள்விக்கு (கேள்வி எண்: 3440), ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்துள்ள புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி யூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தி யுள்ளன. &nbsp;கடந்த 2014 முதல் 2026 வரையிலான 12 &nbsp;ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்தில் &nbsp;மட்டும் புதிதாக 48 சுங்கச் சாவடிகள் திறக்கப் பட்டுள்ளன. அரசு தாக்கல் செய்துள்ள தரவுகளின்படி: * 2014 முதல் 2019 வரையிலான ஆண்டு களில் 818 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்டு, 10 சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 2,401.59 கோடி &nbsp;வசூலிக்கப்பட்டுள்ளது. * 2019 முதல் 2024 வரையிலான ஆண்டு களில் 537 கி.மீ சாலைகள் அமைக்கப்பட்டு, 20 &nbsp;சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 937.69 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. * 2024 முதல் 2026 பிப்ரவரி வரையி லான காலத்தில் 442 கி.மீ சாலைகள் அமைக்கப் பட்டு, 18 சுங்கச்சாவடிகள் மூலம் ரூ. 421.19 &nbsp;கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த 12 ஆண்டுகளில் &nbsp;ரூ. 55 ஆயிரத்து 136 கோடி மதிப்பீட்டில் சாலை கள் அமைக்கப்பட்டு, 48 சுங்கச்சாவடிகள் மூலம் சுமார் 3,760 கோடி ரூபாய் வசூலிக்கப் பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வசூல் குறைவாக உள்ள 10 &nbsp;சுங்கச்சாவடிகள் மட்டுமே இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) ஒப்படைக்கப்பட்டுள்ளன. புள்ளிவிவர முரண்பாடுகளும் மறைக்கப்படும் உண்மைகளும் ஒவ்வொரு நெடுஞ்சாலை வாரியாகவும் விரிவான தரவுகள் வேண்டும் என ஆர். சச்சி தானந்தம் எம்.பி. கேட்டிருந்த நிலையில், &nbsp;அமைச்சர் மொட்டையாக மொத்தப் புள்ளி விவரங்களை மட்டுமே வழங்கியுள்ளார். எந்தெந்த சாலைகளுக்கு எவ்வளவு நிதி &nbsp;ஒதுக்கப்பட்டது என்ற வெளிப்படைத்தன் மையை (Transparency) அமைச்சகம் திட்ட மிட்டு மறைத்துள்ளது. 2014-19இல் இருந்த வசூலை விட, &nbsp;சாலைகளின் நீளம் மற்றும் சுங்கச்சாவடி கள் அதிகரித்த பிறகு அடுத்தடுத்த ஆண்டு களில் வசூல் குறைவாகக் காட்டப்படுவது பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது. இது சுங்க &nbsp;வசூல் புள்ளிவிவரங்களில் முறைகேடு நடந்துள்ளதா? என்ற கேள்வியையும் எழுப்பு கிறது. அதேபோல், சுங்கச்சாவடிகளின் துல்லிய மான கட்டணப் பட்டியலைக் கேட்டதற்கு, பொதுவாக &ldquo;தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளின்படி (2008) வசூலிக்கப்படுகிறது&rdquo; என்று கூறி அமைச்சர் மழுப்பியுள்ளார். இது &nbsp;தரமான சாலைகளை அமைப்பதை விட, சுங்கக் கட்டணம் வசூலிப்பதிலேயே பாஜக &nbsp;அரசு அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. முடங்கிக் கிடக்கும் &nbsp;திண்டுக்கல் - சபரிமலைத் திட்டம் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்கு &nbsp;உட்பட்ட மிக முக்கியமான திட்டங்களான திண்டுக்கல் - காரைக்குடி, திண்டுக்கல் - &nbsp;செம்மடைப்பட்டி மற்றும் ஆன்மீக முக்கியத்து வம் வாய்ந்த திண்டுக்கல் - சபரிமலை தேசிய &nbsp;நெடுஞ்சாலைத் திட்டங்களின் நிலை குறித்தும் ஆர். சச்சிதானந்தம் கேள்வி எழுப்பி னார். இதற்கு அமைச்சர் அளித்துள்ள பதில் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. அதாவது, &nbsp;இத்தனை ஆண்டுகளாகியும் இத்திட்டங்கள் &nbsp;இன்னும் &ldquo;திட்ட அறிக்கை&rdquo; (DPR) தயாரிக்கும் &nbsp;ஆரம்ப நிலையிலேயே இருப்பதாக, ஆர். சச்சிதானந்தம் எம்.பி.க்கு அளித்த பதிலில் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார். ஆர். சச்சிதானந்தம் எம்.பி. &nbsp;மோடி அரசுக்கு கண்டனம் இவற்றை விவரித்து ஆர். சச்சிதானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசுக்கு &nbsp;தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். &ldquo;தமிழக மக்களைச் சுங்கக் கட்டணம் &nbsp;என்ற பெயரில் பாஜக அரசு கடந்த 12 ஆண்டு களாகச் சுரண்டி வருகிறது. சாலைகளின் நீளத்தை விடச் சுங்கச் சாவடிகளின் எண்ணிக் கையை உயர்த்துவதிலேயே இந்த அரசு குறியாக உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் சாலைகளை அமைத்துவிட்டு, மீண்டும் மக்க ளிடமே வசூல் வேட்டை நடத்துவது அநீதியானது. குறிப்பாக, திண்டுக்கல் - சபரிமலை போன்ற வாழ்வாதாரத் திட்டங்களை வெறும் &nbsp;காகித அளவிலேயே முடக்கி வைத்துவிட்டு, சுங்கச்சாவடிகளை மட்டும் வரிசையாகத் திறப்பது தமிழகத்திற்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகம். விரிவான தரவு களைத் தராமல் மழுப்பும் அமைச்சரின் செயல் நாடாளுமன்றத்தையே ஏமாற்றும் செயலாகும்&rdquo; என்று கூறியிருக்கும் ஆர். சச்சி தானந்தம் எம்.பி., &ldquo;தமிழகத்தின் உரிமைகளுக் காகவும், சுங்கக் கட்டணச் சுரண்டலுக்கு எதி ராகவும் எங்களது போராட்டம் தொடரும்&rdquo; என்றும் அவர் எச்சரித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.