பொது விநியோகத்தை அதானிக்கு தாரை வார்க்கும் பாஜக அரசு! - ஆ.கிருஷ்ணமூர்த்தி
14 Jul 2026, 9:38 pm

பொது விநியோகத்தை அதானிக்கு தாரை வார்க்கும் பாஜக அரசு! - ஆ.கிருஷ்ணமூர்த்தி

மாநிலத் துணைத்தலைவர், சிஐடியு “உணவுக்கான உரிமை” என்பது உச்சநீதிமன்றத் தால் அங்கீகரிக்கப்பட்ட வாழ்வதற்கான அடிப்படை உரிமையை உள்ளடக்கி யுள்ளது என்பதை அனை வரும் அறிவோம். அனை வருக்கும், குறிப்பாக ஏழை மற்றும் விளிம்புநிலை குடிமக்களுக்கு உணவுப் பாதுகாப்பினை வழங்குவதே பொது விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஆனால், ஒன்றிய அரசு பொது விநியோகத் திட்டத்தைக் கைவிடும் நோக்கத்தில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013இல் திருத்தம், இந்திய உணவுக் கழகத்தின் தானியக் களஞ்சி யங்களைக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரைவார்ப்பது, நியாயவிலைக் கடைகளைத் தனியாருக்கு அனுமதிப்பது எனத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

அந்தியோதயா திட்டத் திருத்தமும் உணவு உரிமை பறிப்பும்

அந்தியோதயா அன்னயோஜனா (AAY) திட்டத்தில் தற்போது குடும்ப அட்டை ஒன்றிற்கு மாதத்திற்கு 35 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக வழங்கப்பட்டு வருவதை மாற்றி அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி இரண்டு பேர் கொண்ட குடும்பம் எனில் தலா 7 கிலோ வீதம் 14 கிலோ இலவச தானியம், ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர் களைக் கொண்ட குடும்பங்களுக்கு மாதம் அதிக பட்சமாக 35 கிலோ இலவச உணவு தானியம் வழங்கிட, ஒன்றிய அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013இல் திருத்தத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது.

இதன் அடிப்படையில், உணவு தானியங்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 236.9 லட்சம் அந்தியோதயா குடும்பங்களைச் சார்ந்த 939.4 லட்சம் ஏழை மக்களின் உணவு உரிமையைப் பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு சூழ்ச்சி வலையை விரித்துள்ளது. '

தமிழகத்திலும் 18,64,600 அந்தியோதயா அன்னயோஜனா (AAY) குடும்ப அட்டைகள் மூலம் 69,26,983 ஏழை எளிய மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்திற்கு மாதந்தோறும் 65,261 மெட்ரிக் டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கொண்டு வரும் மாற்றத்தின் விளை வாக, ஐந்து நபருக்கும் குறைவாக உள்ள 15.75 லட்சம் குடும்ப அட்டைகளுக்கான உணவு ஒதுக்கீடு 23,321 மெட்ரிக் டன் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ஏற்கெனவே பயனாளியாக இருந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளா வார்கள்; வறுமையும் அதிகரிக்கும்.

சார்த்தக் - பி.டி.எஸ். திட்டமும் நவீனமயமாக்கல் கேள்விகளும்

பொதுவிநியோகத் திட்டத்தை மேம்படுத்து கிறோம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தைச் ‘சார்த்தக்-பி.டி.எஸ்.’ (SARTHAK - Scheme for Assistance in Ration Transport and Handling - Income with Automation in PDS) என ஒன்றிய அரசு தற்போது அறிமுகப்படுத்தி யுள்ளது. இத்திட்டம் 2026-27 முதல் 2030-31 வரையிலான 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்படும் எனவும், இதற்கான நிதியாக ரூ. 25,530 கோடி ஒதுக்கீடும் செய்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான உணவு தானியங்களின் போக்குவரத்தை எளிதாக்கு தல், விநியோக முறையை விரைந்து செயல்படக் கூடியதாக மாற்றுதல், தானியங்கள் கொண்டு செல்லப்படுவதை மேற்பார்வையிடுதல், நியாய விலைக் கடைச் செயல்பாடுகளைக் கண்காணித் தல், இருப்புகளை நிர்வகித்தல் மற்றும் பயனாளி களின் புகார்களைத் தீர்த்தல், போலிப் பதிவுகளை நீக்குதல், மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல், பயனாளி கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் தங்களின் நியாயவிலைப் பொருட்களைப் பெறும் வசதியை மேம்படுத்துதல், ஒருங்கிணைந்த தேசிய பொது விநியோகத்திட்ட தரவுத்தளத்தை உருவாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை முதன்மையாகக் கொண்டு இத்திட்டம் செயல்படும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இத்திட்டம் பரவலாக்கப்பட்ட அல்லது மையப் படுத்தப்பட்ட கொள்முதல் மற்றும் விநியோக முறைகளைக் கொண்டுள்ள மாநிலங்களில் எவ்வாறு செயல்படுத்தப்படும், பொதுவான மற்றும் சிறப்புத் தகுதி பெற்ற மாநிலங்களுக்கு நியாயவிலைக் கடை விளிம்புத் தொகைகள் எவ்வாறு மாற்றி அமைக்கப்படும் என்பதெல்லாம் மிகப்பெரிய கேள்விக்குறியே!

கார்ப்பரேட் மயமாகும் தானியக் கொள்முதலும் சேமிப்பும்

ஒன்றிய அரசு உணவு தானியக் கொள்முதல், சேமிப்பு, நகர்வு அனைத்தையும் அதானி, லீப் குழுமத்திற்குத் தாரைவார்த்துள்ளது. மொத்த முள்ள 60 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களில் சுமார் 46.5 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களை ‘அதானி அக்ரி லாஜிஸ்டிக் லிமிடெட்’ மற்றும் ‘லீப் இந்தியா ஃபுட் அண்ட் லாஜிஸ்டிக் பிரைவேட் லிமிடெட்’ ஆகிய இரண்டு நிறுவனங்களும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அனு மதித்துள்ளது. ரூ. 16,500 கோடிக்கும் அதிக மான மதிப்புள்ள 134 தானியக் களஞ்சிய ஒப்பந்தங் களில் மேற்குறிப்பிட்ட இரு நிறுவனங்கள் மட்டும் 110 ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மீறும் வகையில் தானியக் கொள்முதலைத் தனியாருக்கு ஒப்படைத்துள்ளது ஒன்றிய அரசு.

தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலம் நிதி திரட்ட திட்ட மிட்டதில், 175 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இந்திய உணவுக் கழகத்தின் கிடங்கு களையும், 35 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சென்ட்ரல் வேர்ஹவுஸிங் கிடங்குகளை யும் தனியாருக்குத் தாரை வார்ப்பதற்கும், இந்திய உணவுக் கழகத்திடம் உள்ள 755 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் அதானிக்குத் தாரைவார்ப்பதற்கும்; இவற்றின் மூலம் ரூ. 28,900 கோடி திரட்டவும் திட்டமிடப் பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளின் தனியார்மயமும் மக்கள் விரோதக் கொள்கையும்

பொதுவிநியோகத் திட்டத்தின் நியாயவிலைக் கடைகளைத் தனியாருக்கு வழங்கும் வகையில், முதற்கட்டமாக மாநில அரசுகள் மற்றும் யூனி யன் பிரதேச அரசுகள் தங்களது மாநிலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 கடைகள் திறக்கத் தேவையான இடவசதிகள் செய்து தர வேண்டும். இவர்கள் தனியார் டீலர் என்ற அடிப்படையில், ரேஷன் கடைகளில் பொதுமக்கள் காத்திருப்பு அறைகள், சி.சி.டி.வி. வசதிகள், கழிவறை, குடிநீர், பாதுகாப்பு அம்சங்கள் இருத்தல் வேண்டும். தனியார் நியாயவிலைக் கடை டீலர்கள் என்ற பெயரில் இத்திட்டத்தைச் செயல்படுத்தவும், படிப்படியாகத் தனியாரிடம் நியாயவிலைக் கடைகளை ஒப்படைக்கவும் ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்-2013 மற்றும் பொது விநியோகத் திட்ட அமலாக்கம் ஆகி யவை 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செயல் படுத்தப்படுகிறது. 15 ஆண்டுகளில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் ஏழை களின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்துள் ளது. ஏற்கெனவே வறுமைக் கோட்டிற்கு மேல் (APL), வறுமைக்கோட்டிற்கு கீழ் (BPL) என்ப தற்கான வரையறை என்பது மிகப்பெரிய விமர்ச னத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதா ரத்தைப் புறக்கணித்து, விவசாயிகளின் விளை பொருட்களைக் கொள்முதல் செய்வதையும் கைவிட்டு, கார்ப்பரேட் நலன்களை மட்டுமே பாது காக்கும் மோடி அரசின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளை வலுவாக எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து களம் காண்போம். ஒன்றிய பாஜக அரசு தேசிய உணவுப் பாது காப்புச் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெறக் கோரியும், அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தை உறுதிப்படுத்தக் கோரியும் ஒன்றிணைந்து போராடுவோம்.