தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்தியாவை அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றுகிறது பாஜக அரசு

9 Mar 2026, 4:24 pm
இந்தியாவை அமெரிக்காவின்  அடிமை நாடாக மாற்றுகிறது பாஜக அரசு
<p><strong>இந்தியாவை அமெரிக்காவின் &nbsp;அடிமை நாடாக மாற்றுகிறது பாஜக அரசு&nbsp;</strong></p> <p>சென்னை, மார்ச் 9 - ஒன்றிய பாஜக அரசு சமையல் எரிவாயு &nbsp;சிலிண்டர் விலையை 60 ரூபாய் உயர்த்திய தைத் திரும்பப் பெறக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னை &nbsp;குறளகம் அருகே திங்களன்று கண்டன &nbsp;ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய &nbsp;கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியாவை அமெரிக்காவின் அடிமை நாடாக &nbsp;மாற்றும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ள தாகக் கடுமையாகக் குற்றம் சாட்டினார். எரிவாயு விலை உயர்வும் மக்களின் வாழ்வாதாரமும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 60 &nbsp;ரூபாயும், வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விலை 115 ரூபாயும் உயர்த்தப்பட்டிருப் பது ஏழை, எளிய மக்களின் வாழ்வாதா ரத்தை நிலைகுலையச் செய்துள்ளது. &ldquo;தேர்தல் நேரத்தில் விலையை உயர்த்தா மல் பொய்த் தோற்றத்தை ஏற்படுத்திய ஆட்சி யாளர்கள், இப்போது மக்களின் தலையில் பெரும் சுமையைச் சுமத்தியுள்ளனர். பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் எரிவாயு விலை உயர்வு என்பது அனைத்து அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் &nbsp;அடிப்படையாக அமையும். இந்த உயர்வைக் &nbsp;கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் தொடரும்&rdquo; என்று அவர் எச்சரித்தார். அமெரிக்காவின் தலையீடும் இந்திய இறையாண்மையும் மேற்காசிய நாடுகளின் போர்ச் சூழலால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய பெ. சண்முகம், &ldquo;இந்தியா யாரிடம், எவ்வளவு நாட் களுக்குக் கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்று அமெரிக்கா உத்தரவிடும் அவல நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டு உள்ளது. இறையாண்மை மிக்க ஒரு நாட்டிற்கு மற்றொரு நாட்டின் ஜனாதிபதி அனு மதி கொடுப்பதை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. மோடி அரசு இந்தியாவை &nbsp;அமெரிக்காவின் அடிமை நாடாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. இந்தப் போர்ச் சூழலில் பிரதமர் மோடியோ அல்லது இந்திய அரசோ இதுவரை &nbsp;எவ்விதக் கண்டனத்தையும் தெரிவிக்காதது வன்மையான கண்டனத்திற்குரியது&rdquo; என்று தெரிவித்தார். &lsquo;ஒரே நாடு ஒரே தேர்தல்&rsquo;: ஜனநாயகத்திற்கு ஆபத்து ஒன்றிய பாஜக அரசு முன்வைக்கும் &lsquo;ஒரே நாடு ஒரே தேர்தல்&rsquo; என்ற கோட்பாட்டை &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக மறுப்பதாக அவர் கூறினார். &ldquo;உள்ளாட்சி, சட்ட மன்றம், நாடாளுமன்றம் மற்றும் கூட்டுற வுத் தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் &nbsp;நடைபெறுவதுதான் நம் நாட்டின் ஜனநாயக முறை. இதைச் சீர்குலைத்து ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் உரி மையைப் பறிக்கும் செயலாகும். இது மாநில &nbsp;அரசுகளின் அதிகாரத்திற்கு வேட்டு வைக்கும் &nbsp;ஜனநாயத்திற்கு மாறான அணுகுமுறை&rdquo; என்று அவர் சாடினார். பீகார் அரசியல் மோசடி பீகார் அரசியலில் நடைபெற்றுள்ள மாற்றங்களை &lsquo;மாபெரும் அதிசயம்&rsquo; என்று குறிப்பிட்ட அவர், &ldquo;வாரிசு அரசியலை எதிர்க் கிறோம் என்று சொல்லும் பாஜக, பீகாரில் &nbsp;ஒட்டுமொத்த மக்களையும் ஏமாற்றியுள்ளது. &nbsp;நிதிஷ்குமாரை ராஜினாமா செய்ய வைத்து விட்டு, முதலமைச்சர் பதவியை பாஜக அப கரித்துக்கொண்டது வன்மையான கண்டனத் திற்குரியது. அனைத்து மாநிலங்களிலும் தாங்களே அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற எதேச்சதிகாரப் போக்கின் விளைவே இது&rdquo; என்றார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொ டர்பான பேச்சுவார்த்தை மார்ச் 10 (செவ்வா யன்று) காலை 10:30 மணிக்கு நடைபெற உள்ளதாகத் தெரிவித்த அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இரட்டை &nbsp;இலக்க எண்ணிக்கையிலான தொகுதிகளை &nbsp;வலியுறுத்த உள்ளதாகக் குறிப்பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.