தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக அரசு வேலைகளைத் திருடுகிறது ரயில்வேயில் 2,00,000 பணியிடம் குறைப்பு

24 Nov 2025, 2:46 pm
பாஜக அரசு வேலைகளைத் திருடுகிறது ரயில்வேயில் 2,00,000 பணியிடம் குறைப்பு
<p><strong>பாஜக அரசு வேலைகளைத் திருடுகிறது&nbsp;ரயில்வேயில் 2,00,000 பணியிடம் குறைப்பு</strong></p> <p>திருவனந்தபுரம் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு 11 ஆண்டுகளில் ரயில்வே யில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களைக் குறைத்துள்ளது. டிராக் மேன்களை உள்ளடக்கிய &ldquo;குரூப் டி&rdquo; முதல் &nbsp;உயர் அதிகாரிகள் அடங்கிய &ldquo;குரூப் ஏ&rdquo; வரையிலான பிரிவில் இந்த பணியிட குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 2014இல் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த போது, ரயில்வேயில் 13.31 லட்சம் நிரந்தர &nbsp;ஊழியர்கள் இருந்தனர். காலியிடங்களின் எண்ணிக்கை 2,25,863 ஆக இருந்தது. ஆனால் 2025இல், நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கை 12.50 லட்சமாகவும், காலி யிடங்களின் எண்ணிக்கை 2,76,000 ஆகவும் குறைந்துள்ளது. நிரந்தர ஊழியர்களின் எண்ணிக்கையை ஒவ்வொரு ஆண்டும் 2% &nbsp;குறைக்க வேண்டும் என்ற நிதி ஆயோக் கின் பரிந்துரையின்படி பதவிகள் ஒப்ப டைக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு &nbsp;பதவியில் காலியிடம் இருந்தால், அதில் 50% &nbsp;ஒப்படைக்கப்படுகிறது. இரண்டாவது பாஜக &nbsp;அரசின் கடைசி காலத்தில், 3.75 லட்சம் &nbsp;காலியிடங்கள் இருந்தன. ஆனால் &lsquo;அனு மதிக்கப்பட்ட பதவிகள்&rsquo; என்ற அளவு கோலைப் பயன்படுத்தி காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஊழியர்களைக் குறைக்க &nbsp;டிஜிட்டல் கட்டண முறை பணியாளர்களைக் குறைப்பதன் ஒரு &nbsp;பகுதியாக, ரயில்வே டிஜிட்டல் கட்டணத்தை விரிவுபடுத்துகிறது. பெரிய நிலையங்களில் 14 பொது டிக்கெட் கவுண்டர்கள் வரை &nbsp;இருந்தன. முன்பதிவுக்கான எட்டு டிக்கெட் &nbsp;கவுண்டர்கள் தற்போது இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளன. டிக்கெட் விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படுகின்றன. அவற்றை இயக்க ஒப்பந்தங்கள் வழங் &nbsp;கப்படுகின்றன. இதற்காக ஓய்வு பெற்ற &nbsp;ஊழியர்கள் மீண்டும் நியமிக்கப்படு கிறார்கள். அறுபது வயதில் ஓய்வு பெறு பவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப் பட்டு, மீதமுள்ள தொகை அவர்களின் சேவை யின் முடிவில் சம்பளமாக வழங்கப்படுகிறது. ஓய்வூதியத் தொகை இதிலிருந்து குறைக் கப்படும்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.