முந்தய பக்கம்

நக்சல்களின் நினைவிடங்களை அழிக்கும் பாஜக அரசு பாஜக அரசு

18 Feb 2026, 3:04 pm
நக்சல்களின் நினைவிடங்களை அழிக்கும் பாஜக அரசு பாஜக அரசு
<p><strong>நக்சல்களின் நினைவிடங்களை அழிக்கும் பாஜக அரசு பாஜக அரசு</strong></p> <p>நக்சல்களின் நினை விடங்களை சிஆர்பிஎப் படையினர் மூலம் இடித்து வருகிறது. 2026 மார்ச் 31 க்குள் நக்சல்களை ஒழிக்க வேண்டும் என திட்டம் போட்டு பாஜக அரசு அவர்களை வேட்டையாடி வருகிறது. இதே சூழலில் பல்வேறு பகுதிகளில் இருந்து நக்சல்கள் சரணடைந்தும் வருகிறார்கள். &nbsp;இந்நிலையில் உயிரிழந்த நக்சலைட் தலைவர்கள், கமாண்டர்களுக்காக கட்டப்பட்ட &nbsp;நினைவிடங்களை பாஜக அரசு சிஆர்பிஎப் வீரர்கள் மூலம் இடித்து வருகிறது. &nbsp;நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் கடந்த பிப்ரவரி 8 அன்று &nbsp;ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மறு ஆய்வு செய்ததாகவும், அப்போது அவர் கொடுத்த உத்தரவின்படியே சத்திஸ்க ரில் கடந்த 15 நாட்களில் சுக்மா, பிஜாப்பூர், பஸ்தார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த &nbsp;சுமார் 53 நக்சல் &nbsp;நினைவிடங்களை சிஆர்பி எப் இடித்துள்ளது எனவும் தெரிவிக் கப்பட்டுள்ளது. &nbsp;உள்ளூர் மக்கள் உதவியுடன் பிப்ரவரி இறுதிக்குள் அனைத்து நினைவிடங்க ளையும் இடிக்க சிஆர்பிஎப் இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram