தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள்- : ச.வீரமணி

21 Jul 2026, 10:10 pm
கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள்- : ச.வீரமணி

கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள்- : ச.வீரமணி

சமூகச் செயல்பாட்டாளரும் கல்வியாளரு மான சோனம் வாங்சுக் மேற்கொண்ட உண்ணா விரதப் போராட்டம் தேசத்தின் கவனத்தை ஈர்த்துள் ளது. அரசின் பொறுப்புணர்வின்மை மற்றும் கூருணர்வற்ற போக்கின் காரணமாக, அவரது உயி ருக்குக் கடுமையான ஆபத்து ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாணவர் அமைப்புகள் மற்றும் சமூகத்தின் பரந்த ஜன நாயக, மதச்சார்பற்ற பிரிவினரிடமிருந்து அவருக்கு ஆதரவும் ஒருமைப்பாடும் பெருகியதை தேசம் பார்க்கி றது. இந்தியக் கல்வியின் அவலநிலையை வெளிச்சத்தி ற்குக் கொண்டுவரும் நோக்கத்தை இந்தப் போராட் டம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. கல்வி அமைச்சரின் ராஜினாமா என்பது இயல்பாகவே இதில் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கையாக இருந்தா லும், இந்தியக் கல்வித்துறை எதிர்கொண்டுள்ள பல்வேறு முக்கியமான பிரச்சனைகள் அனைத்தை யும் இப்போராட்டம் உள்ளடக்கியுள்ளது.

இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிந்தைய கல்விப் பாதையைத் தீர்மானித்த விவாதங்கள் மற்றும் அணுகுமுறை ஆகியவற்றிலிருந்து நமது நாடு வெகு தூரம் விலகி வந்துவிட்டது என்பது தெளிவாகிறது. அரசமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு கருவியாகவும், கற்பித்தல் செயல்பாட்டில் அனை வருக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதாகவும் கல்வியைக் கருத்தில் கொள்வதே முதன்மையான நோக்கமாக இருந்தது. அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகளின் (Directive Principles) கீழ் உள்ள 45-ஆவது பிரிவு, 6 முதல் 18 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தை களுக்கும் கல்வியை உறுதி செய்திட வேண்டும் என்று ஆட்சிபுரிவோருக்கு அறிவுரை கூறியிருந்தது.

கல்வியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்ப தற்கான முன்னெடுப்பு, சாதி, இனம், மதம் மற்றும் சமூக-பொருளாதார ரீதியான பின்தங்கிய நிலை ஆகியவற்றைக் கடந்து அனைவருக்கும் கல்விக்கான வாய்ப்பை உறுதி செய்வதை வலியுறுத்தியது. 1993-ஆம் ஆண்டில், உச்சநீதிமன்றம் தனது முந்தைய ‘மோகினி ஜெயின்’ வழக்கின் தீர்ப்பை மாற்றி யமைத்து, 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வி உரிமை என்பது ஓர் அடிப்படை உரிமை என்று தீர்ப்பளித்தது. இந்த முக்கியத் தீர்ப்பு, 2002-ஆம் ஆண்டின் 86-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்ட ‘21A பிரிவை’ உருவாக்குவதற்கு நேரடியாக வழிவகுத்தது. இச்சட்டத் திருத்தம், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை ஓர் அடிப்படை உரிமையாக உறுதி செய்தது. அங்கன்வாடிகள் மற்றும் மதிய உணவுத் திட்டங்களுக்கு வழிவகுத்த ஆரம்பகாலக் குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வித் திட்டங்கள், இச்செயல்முறையை வலுப்படுத்தின.

3 ‘C’ கொள்கைகளும் தேசியக் கல்விக் கொள்கை 2020-இன் பாதிப்புகளும்

னினும், 1980-களின் மத்தியிலிருந்து நிலைமை மாறத் தொடங்கியது. ஆட்சியாளர்கள் பின்பற்றிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் துவங்கிய காலம் முதல் ஒரு முழுமையான மாற்றம் வெளிப்படத் தொடங்கியது.

கல்வி வளர்ச்சிக்கான பொது முதலீட்டின் முக்கியப் பங்கு கேள்விக்கு ள்ளாக்கப்பட்டது. 1990-களிலிருந்தே, கல்விக் கொள்கையானது படிப்படியாக மூன்று ‘C’களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் உருவானது. அதாவது, வணிகமயமாக்கல் (Commercialisation), மையப்படுத்துதல் (Centralisation) மற்றும் வகுப்புவாதமயமாக்கல்(Communalisation) ஆகிய 3 ‘C’களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதத்தில் கல்விக் கொள்கை மாற்றியமைக்கப்பட்டது. மோடி அரசாங்கம் அதிகாரத்தை உறுதியாகக் கைப்பற்றிய நிலையில், கார்ப்பரேட்-இந்துத்துவா மதவெறியர் களின் கூட்டணி முழுவீச்சில் இக்கொள்கையைக் கொண்டுசென்றது வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியது. 2020-ஆம் ஆண்டின் தேசியக் கல்விக் கொள்கை என்பது, ஒருபுறம் ஆர்எஸ்எஸ்-இன் தலையீட்டா லும், மறுபுறம் கல்வியைக் கார்ப்பரேட்டுகளின் லாபம் ஈட்டும் ஒரு களமாக மாற்றும் நோக்கத்துடனும் பெரும்பாலானவர்களால் வடிவமைக்கப்பட்டது. இதன் விளைவுகளை ஆரம்பத்தில் மக்களோ அல்லது சமூகமோ முழுமையாக உணரவில்லை. ஆனால் இப்போது, அதன் உண்மையான கொடூரமான முகமும் பாதிப்புகளும் பொதுவெளியில் அப்பட்டமாகத் தெரியத் தொடங்கிவிட்டன.

அரசுப் பள்ளிகள் மூடுவிழாவும் தனியார்மயமாக்கலும்

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கை ஒன்று ஒப்புக்கொண்டுள்ளது. பள்ளிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது ஒருபுறம் இருக்க, மாணவர் சேர்க்கையே 2 கோடியே 26 லட்சம் குறைந்துள்ளது. மேலும் தினமும் சராசரி யாக 25 பள்ளிகள் மூடப்படுகின்றன. குறிப்பாக, கிராமப்புற இந்தியாவில் நிலவும் இச்சிக்கலின் தீவிரமான தன்மையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பழங்குடியினர் மற்றும் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் இதில் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது.

அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 2014-15இல் 11 லட்சத்து 7 ஆயிரமாக இருந்த நிலையில், 2024-25இல் அது 10 லட்சத்து 13 ஆயிரமாகக் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கையும் 83 ஆயிரத்திலிருந்து 79 ஆயிர மாகக் குறைந்துள்ளது. இதற்கு நேர்மாறாக, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 88 ஆயிரத்தி லிருந்து 3 லட்சத்து 39 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தனியார் துறைப் பள்ளிகளின் இந்த வளர்ச்சி, கல்விக்கான செலவு மற்றும் அணுகல் ஆகியவற்றின் மீது பேரழிவுகரமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020 தேசியக் கல்விக் கொள்கையில் திட்டமிடப்பட்ட - பள்ளிகளை ஒன்றிணைக்கும் - கொள்கையினால் அருகிலுள்ள பள்ளிகள் படிப்படியாக இல்லாமல் போனதே மாணவர் சேர்க்கை குறைவதற்கு முக்கியக் காரணம் என்பதை இந்த அறிக்கை ஒப்புக்கொண்டுள்ளது.

உயர்கல்வி வணிகமயமாக்கலும் தேசியத் தேர்வு முகமையின் முறைகேடுகளும்

அடித்தளத்தின் நிலை இவ்வாறிருக்க, அடுத்தடுத்த உயர்நிலைகளில் படிப்பைப் பாதியில் கைவிடு வோரின் விகிதமும் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் 550-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் புதிதாகத் தொடங்கப் பட்டன. அவற்றில் பெரும்பாலானவை தனியார் நிர்வாகத்தின் கீழ் அமைந்தவை. உயர் கல்விக்கான அகில இந்தியக் கணக்கெடுப்பு (AISHE) தரவு களின்படி, தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 219-லிருந்து 546-ஆக (சுமார் 149% உயர்வு) அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில், அரசுப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 504-லிருந்து 733-ஆக மட்டுமே உயர்ந்துள்ளது.

பெரும்பாலும் லாபத்திற்காக, கார்ப்பரேட்டு களின் ஈடுபாட்டை அரசின் கொள்கை தீவிரமாக ஊக்குவிப்பதால், உயர்கல்வித் துறை கடுமையான நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. வணிக மயமாக்கலுடன், தேசியக் கல்விக் கொள்கையில் ஒன்றிய அரசின் கைகளில் கல்வி அதிகாரத்தை மையப் படுத்தல் பெரும் உத்வேகத்தைப் பெற்றுள்ளது. தேசியக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் ஆர்எஸ்எஸ்-இன் ஈடுபாடு, ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற இந்திய எதார்த்தத்திற்கு முற்றிலும் முரணானது. அந்த சித்தாந்த அடித்தளத்தை அடைவதற் காகவே, மையப்படுத்தல் ஒரு கொடிய கருவியாகச் செயல்பட்டுள்ளது. இதற்கு ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் தேசியத் தேர்வு முக மை (NTA) ஆகும். நீட் (NEET-UG) தேர்வை நடத்தியதில் ஏற்பட்ட மிகப்பெரும் ஊழலால், தேசியத் தேர்வு முகமையின் இழிவான வரலாறு தற்போது மிகவும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பாடத்திட்டங்களின் வகுப்புவாதமயமாக்கலும் முற்போக்குச் சக்திகளின் கடமையும்

2017-ஆம் ஆண்டு முதல், நாடு முழுதும் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளும் முறைகேடு களால் பாதிக்கப்பட்டுள்ளன. தேர்வு நடைமுறைகள் மேலும் மையப்படுத்தப்படுவதால் ஆபத்து தீவிரமடைந் துள்ளது. இந்த மாபெரும் ஊழலில், தனியார் நிறு வனங்களும் பயிற்சி மையங்களும் முக்கியப் பங்காற்றுவது தெரியவந்துள்ளது. மக்களின் நம்பி க்கைகள் தகர்க்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை, எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப் பிற்கான மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளது.

வணிகமயமாக்கல் மற்றும் அதிகாரக் குவிப்பு ஆகியவற்றுடன், கல்வியின் அனைத்து அமைப்பு களையும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர் கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். பாடத்திட்டம் முழுமையாக இந்துத்துவாமயமாக்கப் பட்டு, வரலாறு என்ற பாடம் புராணக் கதைகளின் பிடியில் சிக்கவைக்கப்பட்டுள்ளது. அறிவியல் என்பது சான்றுகளின் அடிப்படையில் வளரும் தன்மையை இழந்து, வெறும் கதைகளின் தொகுப்பாக மாற்றப்பட்டுள்ளது.

வளர்ச்சி, கல்விக்கான வாய்ப்பு மற்றும் சமத்து வம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரு கருவி யாக ‘கல்வி உரிமை’யைப் பாதுகாப்பதன் அவசியம், முன்னெப்போதையும் விட இப்போது மிக முக்கியத்து வம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதேவேளையில், அறி வியல் மனப்பான்மை மற்றும் பகுத்தறிவு ஆகிய வற்றைப் பாதுகாப்பதும் மிக அவசியமானதாக உள் ளது. எனவே, இத்தகைய போராட்டத்தின் நோக்கங் களை அடைவதற்குச் சாத்தியமான மிக விரிவான தொரு தளத்தை உருவாக்குவது அவசரத்தேவையாகும். பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 19 ஜூலை 2026 தமிழில் சுருக்கம் : ச.வீரமணி

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.