முந்தய பக்கம்

ராம்லீலா ஸ்பெஷல் மைதானம் அருகே கடைகளை அடைக்கச் சொல்லி பாஜக அடாவடி!

1 Nov 2026, 11:49 pm
ராம்லீலா ஸ்பெஷல் மைதானம் அருகே கடைகளை அடைக்கச் சொல்லி பாஜக அடாவடி!
<p><strong>ராம்லீலா ஸ்பெஷல் மைதானம் அருகே கடைகளை அடைக்கச் சொல்லி பாஜக அடாவடி!</strong></p><p>தில்லி ராம்லீலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை வாக்குத் திருட்டைக் கண்டித்து இந்தியா அணி சார்பில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வைச் சீர் குலைக்கும் வகையில், அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்க பாஜகவினர் வியாபாரிகளை மிரட்டியுள்ளனர். பண்டிகைக் காலத்தில் இந்தியா கூட்டணியின் பேரணியால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்று பிரச்சனையைத் திசைதிருப்புவதே பாஜகவின் நோக்கம் ஆகும்.</p><p>இதுதொடர்பாக மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில்,”பேரணி மற்றும் பொதுக்கூட்டத் திற்கு வரும்போது பொருட்கள் வாங்குமாறும், சிறு விற்பனையாளர்களுக்கு ஆதரவு அளிக்குமாறும் எல்லாரிடமும் கூறியிருந்தோம். ஆனால், இங்கு கன்னாட் பிளேஸுக்கு வரும்போதுதான் தெரிந்தது, பாஜக ஒவ்வொரு கடையையும் வலுக்கட்டாயமாக மூட வைத்துள் ளது. எனவே, வர்த்தகர்களுக்கு யார் இழப்பை ஏற்படுத்துகிறார்கள், அதுஎவ்வாறு நடக்கிறது என்பதைப் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என அவர் கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram