தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதானி ஊழலை அம்பலப்படுத்தியதால் கட்சியை விட்டுத் துரத்திய பாஜக

15 Nov 2025, 1:19 pm
அதானி ஊழலை அம்பலப்படுத்தியதால் கட்சியை விட்டுத் துரத்திய பாஜக
<p><strong>அதானி ஊழலை அம்பலப்படுத்தியதால் கட்சியை விட்டுத் துரத்திய பாஜக</strong></p> <p>பாஜக மூத்த தலைவரும், முன் னாள் ஒன்றிய அமைச்சரு மான ஆர்.கே.சிங் (ராஜ் குமார் சிங் - முன்னாள் ஐஏஎஸ் அதி காரி) கடந்த வாரம்,&rdquo;பீகார் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜன நாயக கூட்டணி அரசு அதானி குழுமத்து டன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட் டது. அதில் 25 ஆண்டுகளுக்கு பீகார் அரசு அதானி குழுமத்திடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.6.75 என்ற விகிதத்தில் மின்சாரம் வாங்கும். இந்த ஒப்பந்தத் தில் அலகு ஒன்றுக்கு 1 ரூபாய் 41 &nbsp;பைசா அதிகமாகும். அதானி பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப் பட்ட நிலத்திலும், பீகார் மக்கள் ஒரு யூனிட்டுக்கு மின்சாரம் பெறும் விகிதத்தி லும் ரூ.62,000 கோடி ஊழல் நடந்துள் ளது. இதன் சுமையை பீகார் மக்கள் நேர டியாக ஏற்க வேண்டியிருக்கும்&rdquo; என அவர் குற்றம்சாட்டினார். &nbsp;மேலும், &ldquo;பீகார் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியால் நிறுத் தப்பட்ட வேட்பாளர்கள் உட்பட அனைத் துக் குற்றப் பின்னணி கொண்ட வேட்பா ளர்களையும் நிராகரிக்க வேண்டும். சரியான வேட்பாளர் கிடைக்கவில்லை என்றால் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்&rdquo; என கோரிக்கை விடுத்தார். ஆர்.கே.சிங் பேச்சு பாஜகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதானி ஊழலை அம்பலப்படுத்திய ஆர்.கே.சிங் பாஜக வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள் ளார். இதுதொடர்பாக அக்கட்சி வெளி யிட்டுள்ள அறிக்கையில்,&ldquo;நீங்கள் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகி றீர்கள். இது கட்சிக்கு தீங்கு விளை வித்துள்ளது. எனவே, உங்களை இடை நீக்கம் செய்து, ஏன் உங்களை நீக்கக் கூடாது என்று விளக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். ஒரு வாரத் திற்குள் முறையான பதிலை சமர்ப்பிக்க வேண்டும்&rdquo; என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.