தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்த பாஜக நிர்வாகிகள் கோவையில் அரங்கேறிய அவலம்!

5 Feb 2026, 3:40 pm
மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்த பாஜக நிர்வாகிகள் கோவையில் அரங்கேறிய அவலம்!
<p><strong>மாற்றுத்திறனாளிகளை அலைக்கழித்த பாஜக நிர்வாகிகள் கோவையில் அரங்கேறிய அவலம்!</strong></p> <p>கோவை, பிப்.5- அரசியல் ஆதாயத்திற்காக நடத் தப்படும் விளம்பர மோகத்தில், மாற் றுத்திறனாளிகளின் அடிப்படை கண்ணியம் காலில் போட்டு மிதிக்கப் பட்ட சம்பவம் கோவையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணப்பநகர் பகுதியில், வியாழனன்று பாஜக சார் பில் &lsquo;மோடி முகாம்&rsquo; என்ற பெயரில் &nbsp;நலத்திட்ட உதவிகள் வழங்கும் &nbsp;நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. காலை 9 மணிக்கு நிகழ்ச்சி &nbsp;தொடங்கும் என அறிவிக்கப்பட்ட தால், முதியோர்களும், நடக்க இய லாத மாற்றுத்திறனாளிகளும் குறித்த &nbsp;நேரத்திற்கு முன்பே நிகழ்ச்சி நடை பெறும் இடத்திற்கு வந்து சேர்ந்த னர். ஆனால், விழா நாயகர்களாக தங்களைக் கருதிக்கொண்ட சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் &nbsp;மற்றும் பாஜக மேலிடப் பொறுப்பா ளர் சுதாகர் ரெட்டி ஆகியோர், காலை &nbsp;11.30 மணிக்கே நிதானமாக வந்தனர். &nbsp;சுமார் மூன்று மணி நேரம் சுட்டெரிக் கும் வெயிலிலும், உடல் உபாதை களுக்கிடையிலும் காத்திருந்த ஏழை &nbsp;மக்களின் தவிப்பு, அங்கு வந்திருந்த &nbsp;அரசியல் பிரமுகர்களின் கண்களுக் குத் தெரியவில்லை. நிகழ்ச்சியின் தொடக்கமே ஒரு &nbsp;சுயநல நாடகமாக அமைந்தது. நலத் திட்டங்களைப் பெறுபவர்களுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத் துக்கொள்வதிலேயே நிர்வாகிகள் &nbsp;ஆர்வம் காட்டினர். விளம்பரத்திற் காகப் பயனாளிகளை அருகில் அமர &nbsp;வைத்தவர்கள், அவர்களுக்கு வழங்க வேண்டிய மரியாதையை மேடையில் வழங்கத் தவறினர். வழக்கமாக மாற்றுத்திறனாளிக ளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங் கும் போது, மேடைக்குக் கீழே வந்து &nbsp;வழங்குவதே மரபு. முதலமைச்சர் உள்ளிட்டோர் இந்த மரபையே கடை பிடிக்கின்றனர். மாற்றுத்திறனாளிக ளுக்கான தேவை அதிகம் இருக் கிறது என்கிற காரணத்தினால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற் றுத்திறனாளிகள் துறையையே தன் னுடன் வைத்துள்ளார். ஆனால், பாஜக நிகழ்ச்சியில் நடந்ததோ தலைகீழ். சக்கர நாற் காலியிலும், ஊன்றுகோல் உதவியுட னும் வந்திருந்த மாற்றுத்திறனாளி களை, நெரிசலான கூட்டத்திற்குள் புகுந்து மேடைக்கு வருமாறு அழைத் தனர். உதவி செய்யக் கூட ஆளில்லா மல், அவர்கள் மேடையில் ஏறிச் &nbsp;செல்ல பட்ட அவதி பார்ப்பவர்களின் &nbsp;கண்களில் கண்ணீரை வரவழைத் தது. &ldquo;உதவி செய்கிறோம் என்ற பெய ரில் எங்களை இப்படி அவமானப்ப டுத்த வேண்டுமா?&rdquo; - என அங்கிருந்த &nbsp;மாற்றுத்திறனாளிகளின் மௌனக் குரல் அனைவரையும் முகம் சுளிக்க &nbsp;வைத்தது. இந்தச் சம்பவம் ஒருபுறமிருக்க, இந்த நலத்திட்ட உதவிகளின் பின்ன ணியில் உள்ள அரசியலும் தற்போது &nbsp;பேசுபொருளாகியுள்ளது. வானதி சீனிவாசன் தனது தன்னார்வ அமைப்பு மூலம் பெரிய நிறுவனங்க ளின் CSR (Corporate Social Responsibility) நிதியைப் பெற்று, &nbsp;அதை பாஜகவின் தேர்தல் பிரச்சாரத் திற்காக பயன்படுத்தி வருவதாக அரசியல் நோக்கர்கள் குற்றம் சாட்டு கின்றனர். பொதுமக்களின் வரிப் பணத்திலும், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலும் செய்யப் படும் உதவிகளை, கட்சியின் சாத னையாக காட்டுவது எந்த விதத் தில் நியாயம் என்ற கேள்வி எழுந்துள் ளது. மேலும், இவர் வெற்றி பெற்ற தொகுதி கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, இங்கு எட்டிக்கூட பார்ப் பதில்லை என்பதால் இனி போட்டி யிட்டால் தோல்வி நூறு சதம் உறுதி என்பதை அறிந்து, வடக்குத் தொகு தியை குறிவைத்து சுயநலனுக்காக விளம்பர பகட்டில் ஈடுபட்டு வருவ தாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டு கின்றனர். &nbsp;அரசியல் விளம்பரங்களுக்காக ஏழை மக்களின் இயலாமையை மேடைப் பொருளாக்குவது கண்டிக் கத்தக்கது. உதவி பெற வருபவர் களை மரியாதையுடன் நடத்துவதே ஒரு மக்கள் பிரதிநிதியின் அடிப் படைப் பண்பு. கோவையில் நடந்த இந்த &lsquo;மோடி முகாம்&rsquo;, சேவையை விட சுய விளம்பரமே பிரதானம் என் பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.