தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜக-வின் தேர்தல் நாடகமும், அம்பலமான குமுறல்களும்!

22 Feb 2026, 3:26 pm
பாஜக-வின் தேர்தல் நாடகமும், அம்பலமான குமுறல்களும்!
<p><strong>பாஜக-வின் தேர்தல் நாடகமும், அம்பலமான குமுறல்களும்!</strong></p> <p>நாமக்கல், பிப்.22- தேர்தல் நெருங்கும் வேளை யில், மக்கள் படும் துயரங்களை காதுகொடுத்து கேட்கக்கூட மன மில்லாத ஒரு கட்சி, எப்படி மக்க ளுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க முடியும்? இதற்கு சாட் சியாக அமைந்ததுதான் கடந்த சனியன்று நாமக்கல் திருச்செங் கோட்டில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு &nbsp;கூட்டம். தமிழகத்தின் வாழ்வாதாரமாக விளங்கும் லாரித்தொழில், விசைத் தறி மற்றும் தங்க நகைத் தொழி லாளர்களின் குறைகளை கேட்க &nbsp;வந்த இடத்தில், அவர்களின் நியா யமான குமுறல்களை &ldquo;வியாக்கி யானம்&rdquo; என்று கிண்டலடித்த பாஜக நிர்வாகிகளின் போக்கு, தொழில் முனைவோர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள் ளது. இக்கூட்டத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ரா ஜன் முன்னிலையில், நாமக்கல் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அருள், தனது தரப்பு நியாயங்களை மிகத் தெளி வாக முன்வைத்தார். அவர் எழுப் பிய கேள்விகள் அனைத்தும் ஒரு சாமானிய லாரி உரிமையாளரின் எதிர்பார்ப்பு. இதில்,காலாவதியான சுங்கச் சாவடிகள் ஏன் இன்னும் செயல் படுகின்றன? விஐபிக்கள் இலவச மாக செல்வதால் ஏற்படும் இழப்பை ஏன் சாமானிய லாரி உரிமையா ளர்கள் தலையில் கட்டுகிறீர்கள்? மும்பையில் இருந்து கொல்கத்தா செல்லும் ஒரு லாரிக்கு ஒரு டோல் கேட்டிலேயே ரூ.7650 கட்டணம் வசூலித்தால், ஒரு ட்ரிப்பிற்கு 15 &nbsp;ஆயிரம் ரூபாய்க்கு மேல் சுங்கக் &nbsp;கட்டணமாகவே போனால், தொழில் செய்வது எப்படி?. சர்வதேச சந் தையில் கச்சா எண்ணெய் விலை &nbsp;குறைந்தும், இந்தியாவில் மட்டும் ஓராண்டாகப் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாதது ஏன்? &nbsp;என இப்படி நியாயமான கேள்வி களை அருள் அடுக்கிக்கொண்டி ருந்தபோது, சேலம் கோட்ட பாஜக பொறுப்பாளர் கே.பி. ராமலிங்கம் குறுக்கிட்டு, &ldquo;நிறுத்துங்க! இந்த வியாக்கியானம் எல்லாம் வேணாம்; சுருக்கமா விஷயத்தை சொல் லுங்க!&rdquo; என ஒருமையில் மிரட்டும் தோனியில் பேசினார். இது அங்கி ருந்த லாரி உரிமையாளர்களை மட்டுமல்ல, கூட்டத்தில் பங்கேற்ற வர்கள் அனைவரையும் அதிர்ச்சிய டைய வைத்தது. இருந்தபோதும், பாஜகவின் ஒன்றிய ஆட்சியால் நாங்கள் எவ் வளவு பாதிக்கப்பட்டிருக்கிறோம். இந்த நேரத்தில் சொல்லாமல் எந்த நேரத்தில் சொல்வது என தங்க ளின் கோரிக்கைகளை கொண்டு சென்றே தீருவது என்கிற முனைப் புடன், பாஜகவின் அதிகாரத் தோர ணைக்கு அஞ்சாத லாரி உரிமை யாளர் சங்கத் தலைவர் அருள், &nbsp;அந்த இடத்திலேயே நெற்றிப்பொட் டில் அடித்தார் போலப் பதிலடி கொடுத்தார். &ldquo;கடந்த தேர்தலின் போது எங்களைக் கூப்பிட்டீர்கள், ஆனால் நீங்கள் வரவில்லை. இப் போது எனக்கு மேடை கிடைத்தி ருக்கிறது, என் மக்களின் குறை களை சொல்லாமல் விடமாட்டேன். 60 ஆயிரம் லாரிகளை இயக்கும் குடும்பங்களின் பிரதிநிதியாக நான் பேசுகிறேன்; உங்களுக்கு பிடித்தால் எடுத்துக்கொள்ளுங் கள், இல்லையென்றால் விட்டுவிடுங் கள்&rdquo; என்றார். இதனை கொஞ்சமும் எதிர்பார்க்காத பாஜக தலைவர் களின் முகத்தில் ஈ ஆடவில்லை. முகம் வெளுத்துப் போனது. வாகனங்களின் எடையை விட்டு விட்டு, அதன் வயதை வைத்து வரி வசூலிப்பது, ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் உரிமையாளர் களை வாட்டுவது என ஒன்றிய அர சின் ஒவ்வொரு நடவடிக்கையும் லாரி தொழிலை முடக்கும் விதமா கவே உள்ளது. பலமுறை வேலை நிறுத்தம் செய்தும், கோரிக்கை மனுக்கள் அளித்தும் எதற்கும் செவிசாய்க்காத பாஜக அரசு, இப் போது தேர்தல் வந்தவுடன் &ldquo;கருத் துக்கேட்பு&rdquo; என்ற பெயரில் நாடகம் நடத்துவதை மக்கள் உணர்ந்தே வைத்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்கவோ, டீசலை ஜிஎஸ்டிக் குள் கொண்டு வரவோ துப்பில்லாத ஒரு அரசு, கருத்து கேட்கிறோம் என்று வருவது வெறும் கண் &nbsp;துடைப்பு என்பதை திருச்செங் கோடு சம்பவம் உறுதிப்படுத்தி யுள்ளது. &ldquo;வியாக்கியானம் பேசாதே&rdquo; என்று மக்களின் குரலை ஒடுக்க நினைக்கும் பாஜகவின் போக்கிற்கு, வரும் தேர்தலில் தமி ழக தொழில்முனைவோர் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என்பதே அன்றைய கூட்டத்தில் நிலவிய ஒட்டுமொத்த உணர்வாக இருந் தது. தமிழிசை சௌந்தர்ராஜன் &ldquo;15 பேர் கொண்ட குழு இதை ஆராயும்&rdquo; என்று மழுப்பலாகப் பதிலளித்தா லும், பாஜகவின் தேர்தல் வாக்கு றுதிகள் எதையும் நம்பத் தயாராக இல்லை என்பதே தமிழக மக்களின் தற்போதைய மனநிலை. (ந.நி)</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.