கர்நாடகாவில் மத வன்முறையை தூண்ட பாஜக தீவிரம்
10 Nov 2025, 2:46 pm
<p><strong>கர்நாடகாவில் மத வன்முறையை தூண்ட பாஜக தீவிரம்</strong></p>
<p>கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநி லத்தின் தலைநகர் பெங்களூரு வில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2ஆவது முனை யத்தில் முஸ்லிம்கள் தொழுகை செய்த தாகக் கூறப்படுகிறது. உடனே பாஜக செய்தித் தொடர்பாளர் விஜய்பிரசாத்,”உயர் பாதுகாப்பு மண்ட லத்தில் இதுபோன்ற செயல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பிரி யங்க் கார்கே விளக்கம் அளிக்க வேண் டும். மேலும் விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றி ருந்தார்களா? மேலும் சம்பந்தப்பட்ட அதி காரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரி விப்பது ஏன்?” என வன்முறையை தூண் டும் வகையில் பேசியுள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக முஸ்லிம் மக்க ளுக்கு எதிராக மாநிலம் தழுவிய போராட் டம் நடத்த உள்ளதாக பாஜக அறிவித் துள்ளது.</p>
