தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்ட ஒரே ஆண்டில் ரூ.3,112 கோடி நன்கொடையாக அள்ளிய பாஜக

21 Dec 2025, 3:21 pm
தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்ட ஒரே ஆண்டில் ரூ.3,112 கோடி நன்கொடையாக அள்ளிய பாஜக
<p><strong>தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்ட ஒரே ஆண்டில் ரூ.3,112 கோடி நன்கொடையாக அள்ளிய பாஜக</strong></p> <p>புதுதில்லி அரசியல் கட்சிகளுக்கு நன் கொடை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட தேர் &nbsp;தல் பத்திரத் திட்டத்தை உச்சநீதி மன்றம் கடந்த 2024ஆம் ஆண்டு &nbsp;ரத்து செய்தது. தேர்தல் பத்திரத் திட்டம் &nbsp;அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரா னது என்று கூறி தடை விதிக்கப்பட்ட தைத் தொடர்ந்து, தற்போது காசோ லைகள் மற்றும் ஆன்லைன் பரிவர்த்த னைகள் மூலம் மட்டுமே அரசியல் கட்களுக்கு நன்கொடை கிடைத்து வருகிறது. &nbsp;இந்நிலையில், தேர்தல் பத்திரத் திட்டம் ரத்து செய்யப்பட்டப் பின்பு 2024-2025 ஒரே ஆண்டில் பதிவு &nbsp;செய்யப்பட்ட 9 தேர்தல் அறக்கட்டளை கள் மூலம் மொத்தம் 3,811 கோடி &nbsp;ரூபாய் அரசியல் கட்சிகளுக்கு நன் கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வழங்கப்பட்ட 1,218 கோடி ரூபாயு டன் ஒப்பிடுகையில், இந்த தொகையா னது 200 சதவீதத்திற்கும் அதிகமா கும் என தேர்தல் ஆணைய அறிக்கை கள் மூலம் செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் &nbsp;நிதியளித்தார்கள் என்பது ரகசியமாக &nbsp;இருந்த நிலையில், தேர்தல் அறக் கட்டளைகள் மூலம் வழங்கப்படும் நிதி விவரங்கள் வெளிப்படையானவை ஆகும். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குக் கிடைத்த நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து வருகிறது. முதலிடத்தில் &ldquo;புரூடென்ட்&rdquo; இத்தகைய சூழலில்,தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யபட்ட அறிக்கைகள் மூலம் வெளியான தகவலில்,&rdquo;மொத்த நன்கொடையில் ஐந்தில் நான்கு பங்கு, அதாவது 82% ஆளும் பாஜகவுக்கு சென்றுள்ளது. அக்கட்சிக்கு மட்டும் ரூ.3,112 கோடி &nbsp;கிடைத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சி யான காங்கிரசுக்கு வெறும் ரூ.299 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது மொத்த நிதியில் 8 சதவீதத்திற்கும் குறைவானதாகும். அதிகபட்சமாக &ldquo;புரூடென்ட்&rdquo; தேர்தல் அறக்கட்டளை மூலம் 2,668 &nbsp;கோடி ரூபாய் நன்கொடை அளிக் &nbsp;கப்பட்டுள்ளது. இதில் 2,180 கோடி &nbsp;ரூபாய் பாஜகவிற்கு வழங்கப்பட்டுள் ளது. ஜிண்டால் ஸ்டீல், ஏர்டெல், அர விந்தோ பார்மா போன்ற பெரு நிறு வனங்களிடமிருந்து நிதியைப் பெற்று, காங்கிரஸ் மற்றும் திரிணா முல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்குச் &nbsp;சிறிதளவு வழங்கிவிட்டு, பெரும்பகுதி யை பாஜகவிற்கு இந்த அறக்கட்டளை வாரி வழங்கியுள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த நிறு வனங்களிடமிருந்து நிதியைப் பெறும் &ldquo;புரோகிரசிவ்&rdquo; தேர்தல் அறக்கட்டளை, தனது மொத்த நன்கொடையான ரூ.914 கோடியில் 80% பாஜகவிற்கு வழங்கியுள்ளது. டாடா சன்ஸ், டிசிஎஸ், &nbsp;டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவ னங்கள் இந்த அறக்கட்டளை மூலம் &nbsp;நிதியளித்துள்ளன. மகிந்திரா குழும &nbsp;நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்ற &ldquo;நியூ டெமாக்ரடிக்&rdquo; அறக்கட் டளை, திரட்டிய 160 கோடி ரூபாயில் 150 கோடி ரூபாயை பாஜகவிற்கே வழங்கியுள்ளது. அதேவேளையில் மும்பையைச் சேர்ந்த கேஇசி இன்டர் நேஷனல் நிறுவனம் &ldquo;ஜன் பிரகதி&rdquo; அறக்கட்டளை மூலம் வழங்கிய ஒரு கோடி ரூபாய் முழுவதும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா பிரிவுக்குச் சென்றுள்ளது&rdquo; என அதில் தகவல் வெளியாகியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.