முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

5 Jun 2026, 12:41 am
தீக்கதிர் முக்கிய செய்திகள்

பத்திரிகையாளர் அபிசார் சர்மா

பாஜக அரசு மிகவும் ஆணவப்போக்குடன் நடந்து கொள்கிறது. நீட், சிபிஎஸ்இ விவகாரத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரினால், பாஜக அரசு மறுக்கிறது. இந்தத் தார்மீகப் பொறுப்பு என்ற ஒரு விஷயமே தற்போதைய அரசாங்கத்தில் கிடையாது.

பத்திரிகையாளர் சுனேத்ரா சௌத்ரி

இந்தியாவின் குறைந்த செலவிலான மிகச் சிறந்த மருத்துவச் சேவையானது உலகெங்கிலும் உள்ள மருத்துவச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. ஆனால் நம்மை நம்பி வரும் வெளிநாட்டுப் பயணிகளையும், ஏன் நம்முடைய சொந்த நாட்டு மக்களையும் கூட நாம் இந்த அளவுக்குப் பாதுகாப்பற்ற (தில்லி தீ விபத்து) சூழலில் கைவிடுவது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்க பாஜக அரசு பெண்களின் கல்வி, ஆரோக்கியம், நிலம், அவர்களது குடும்பச் சொத்துக்கள் குறித்த அத்தனை விபரங்களையும் கேட்டு 12 பக்கப் படிவத்தைக் கட்டாயமாக நிரப்பச் சொல்கிறது. அதே நேரத்தில் நாட்டின் பிரதமரின் கல்வித் தகுதி குறித்த விபரங்களை யாராவது கேட்டால், அவர்களைத் தண்டிப்பதற்கு ஒன்றிய அரசு துடிக்கிறது.

யுவதேஷ் சமூக ஊடகம்

பாஜகவின் சித்து விளையாட்டால் தான் மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் விவகாரத்தில் திரிணாமுல் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. எஸ்ஐஆர் மூலம் வாக்காளர்களை தேர்ந்தெடுப்பது போல தற்போது ஆட்சியில் அமரும் மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை கூட பாஜக தேர்வு செய்ய ஆரம்பித்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram