ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி 14 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கெடு!
31 Oct 2026, 8:59 pm

ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி 14 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக கெடு!

ஸ்ரீநகர்ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 90 உறுப்பினர்களில், 54 உறுப்பினர்களின் ஆதரவுடன் (தேசிய மாநாட்டுக் கட்சிக்கு 41, காங்கிரஸ் 6, சிபிஎம் 1, சுயேட்சை 6) தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா முதலமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கைசர் ஜம்ஷீத் லோன் ஸ்ரீநகரில் உள்ள தனது இல்லத்தில் அதிருப்தி எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் 12 முதல் 14 எம்எல்ஏக்கள் வரை பங்கேற்றனர். தானமண்டி தொகுதி சுயேட்சை எம்எல்ஏ முசாபர் இக்பால் கானும் பங்கேற்றார். தங்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும், இல்லையென்றால் 15 நாட்களுக்குப் பின் அடுத்த முடிவை அறிவிப்போம் என எம்எல்ஏக்கள் உமர் அப்துல்லாவுக்கு கெடு விதித்துள்ளனர்.

ஆனால் ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி காரணமாகவே, 14 எம்எல்ஏக்கள் கெடு விதித்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு கொள்கையை விற்க துணிந்துவிட்டனர் என தேசிய மாநாட்டுக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.