தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பீகாரில் “புல்டோசர் காட்டாட்சியை” துவங்கியது பாஜக கூட்டணி அரசு 5 மாவட்டங்களில் முஸ்லிம், ஏழை மக்களின் வீடுகள், கடைகள் இடிப்பு

24 Nov 2025, 2:46 pm
பீகாரில் “புல்டோசர் காட்டாட்சியை” துவங்கியது பாஜக கூட்டணி அரசு 5 மாவட்டங்களில் முஸ்லிம், ஏழை மக்களின் வீடுகள், கடைகள் இடிப்பு

பீகாரில் “புல்டோசர் காட்டாட்சியை” துவங்கியது பாஜக கூட்டணி அரசு 5 மாவட்டங்களில் முஸ்லிம், ஏழை மக்களின் வீடுகள், கடைகள் இடிப்பு

பாட்னா வாக்குத் திருட்டு, ரூ. 10,000 உதவி நிதி (லஞ்சம்), தேர்தல் ஆணையம் - பாஜக கள்ளக் கூட்ட ணியின் சதி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜன நாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி யைக் கைப்பற்றியது. புதிய அமைச்சரவையில் ஐக்  கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்  குமாருக்கு முதலமைச்சர் பதவி  கொடுக்கப்பட்டாலும், உள்துறை பொறுப்பை அவரிடம் இருந்து பறித்தது பாஜக. மேலும் ஐக்கிய  ஜனதாதளம் கட்சி எம்எல்ஏக்க ளுக்கு டம்மி பொறுப்புகளை கொடுத்துவிட்டு, உள்துறை, நிதி, சட்டம் உள்ளிட்ட அனைத்து முக்கி யத் துறைகளை பாஜக கைப்பற்றி யது. அதாவது பீகாரில் பாஜக கூட்  டணி ஆட்சி நடைபெற்று வருகிறது  என்பதை விட, பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது என்றே வெளிப்ப டையாகக் கூறலாம். ஆபரேசன் புல்டோசர் இந்நிலையில், பீகாரில் ஆட்சி  அமைத்த குறுகிய காலத்தில் பாஜக  கூட்டணி அரசு நிர்வாகம் புல்டோ சர் காட்டாட்சியைத் துவங்கியுள் ளது. பாஜக மூத்த தலைவரும், பீகார் துணை முதலமைச்சருமான சாம்ராட் சவுத்ரி  உள்துறை பொறு ப்பை ஏற்ற சில மணி நேரத்திலேயே  சமஸ்திபூர் மாவட்டத்தில் சட்ட விரோத ஆக்கிரமிப்பு என்ற பெய ரில் முஸ்லிம், ஏழை மக்களின் வீடு கள், கடைகள் அறிவிப்பின்றி புல்டோசர் மூலம்  இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. தொடர்ந்து சனிக்கிழமை முதல் லக்கிசராய், சீதாமர்ஹி, டானாபூர் மற்றும்  பாகல்பூர் உள்ளிட்ட மாவட்டங்களி லும் தொடர்ச்சியான புல்டோசர் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த அடாவடி நட வடிக்கைக்கு “ஆபரேஷன் புல்டோ சர்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமஸ்திபூரில்  கதறி அழுத மக்கள் சமஸ்திபூர் ரயில் நிலையத் திற்கு அருகிலுள்ள மால் கோடவுன்  சவுக் பகுதியில் 15க்கும் மேற்பட்ட கடைகள் புல்டோசர் மூலம் இடிக் கப்பட்டன. பல கடை மற்றும் வீட்  டின் உரிமையாளர்கள் 10 நாள் கால அவகாசம் கோரினர். இடிக்க  வேண்டாம் என கதறி அழுதனர்.  ஆனால் எதையும் கண்டுகொள்ளா மல் புல்டோசர் மூலம் அடாவடி யாக கடை, வீடுகளை இடித்துச் சென்றது மாவட்ட நிர்வாகம். லக்கிசராய் நகரில் போராட்டம் லக்கிசராய் நகரத்தின் மையப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை குடிசை வீடுகள், கடைகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் மாவட்ட நிர்வாகம் காவல்துறை மூலம் போராட்டத்தை ஒடுக்கி,  தொடர்ந்து புல்டோசர் நடவடிக்கை யை மேற்கொண்டது. அதே போல சீதாமர்ஹி நக ராட்சிப் பகுதியில் ஞாயிறன்று கவு ஷாலா சவுக்கிலிருந்து புனவுரா  தாம் கோவில் நுழைவாயில் வரை  புல்டோசர் மூலம் கடைகள், வீடு கள் இடிக்கப்பட்டன. திங்களன்று 2ஆவது நாளிலும் நடவடிக்கை தொடர்ந்தது. அதே டானாபூர் மற்  றும் பாகல்பூர் நகரங்களிலும் புல்டோசர் அடாவடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

“வட்டிக் கடை” பாஜக கூட்டணி அரசு

புல்டோசர் மூலம் கடைகள், வீடுகளை அறிவிப்பின்றி இடித்த பின்பு, இவ்வ ளவு நாட்கள் ஆக்கிரமிப்பு நிலத்தை பயன்படுத்தியது சட்டப்படி குற்றம் என்ற  பெயரில், அபாரதம் வசூலிக்கிறது பீகார் பாஜக கூட்டணி அரசு. புல்டோசர் நட வடிக்கையின் சம்பவ இடத்தில் அபராதம் செலுத்தவில்லை என்றால், கடை மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்கிறது. பொருட்களை மீண்டும் தர வேண்டுமானால் ரூ.4,500 முதல் ரூ.10,000 வரை பணம் கொடுத்துவிட்டு பொருட்களை பெற்றுச் செல்லலாம் என மாவட்ட வட்டிக்  கடை போல அறிவிப்பு வெளியிட்டு அடாவடியில் ஈடுபட்டு வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.