தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பள்ளிவாசல் முன்பு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

12 Apr 2026, 5:30 am
பள்ளிவாசல் முன்பு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

பள்ளிவாசல் முன்பு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

மற்ற அரசியல் கட்சியினர் சிறுபான்மை மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தால், அவர்களைத் 'துரோகி' செய்கிறார்கள் என்றும், 'வாக்கு வங்கி அரசியல்' நடத்துகிறார்கள் என்றும் விஷத்தைக் கக்கும் பாரதிய ஜனதா கட்சி, இப்போது அதே பாணியைக் கையில் எடுத்துள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திருப்பூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் எஸ். தங்கராஜ், செவ்வாயு கிழமை அன்று பள்ளிவாசல் முன்பு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அவர் கைகூப்பித் தனக்கு ஆதரவு திரட்டினார்.

திருப்பூர் சிறுபான்மையினருக்கு எதிராகத் தொடர்ந்து வெறுப்பைப் பரப்பி வரும் இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தின் மகன்தான் இந்த வேட்பாளர் தங்கராஜ். மத அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பேசி அரசியல் செய்யும் இந்து முன்னணியின் வாரிசு, தேர்தல் என்று வந்தவுடன் எவ்விதக் கூச்சமும் இல்லாமல் பள்ளிவாசல் முன்பு நின்று ஆதரவு கேட்டது மக்களின் முகங்களை சுளிக்க வைத்துள்ளது.

பிற கட்சிகளை விமர்சித்து விட்டு, அதே செயலைத் தாங்கள் செய்யும்போது அதற்குப் பெயர் 'ஜனநாயகம்' எனப் பா.ஜ.க பேசுவது அப்பட்டமான இரட்டை வேடம். பள்ளிவாசலில் இருந்து வெளியே வந்த இஸ்லாமியர்கள் பலரும் இவரைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்ற நிலையில், சிலர் மரியாதை நிமித்தமாகப் பதில் வணக்கம் கூறிச் சென்றனர். தேர்தல் ஆதாயத்திற்காக எதையும் செய்யும் பா.ஜ.க-வின் இந்த மலிவான அரசியலைத் திருப்பூர் மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

- வே. தூயவன்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.