திருப்பூர் தெற்கில் பாஜக வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே போட்டா போட்டி
26 Mar 2026, 2:46 pm
<p><strong>திருப்பூர் தெற்கில் பாஜக வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே போட்டா போட்டி</strong></p>
<p>திருப்பூர், மார்ச்.26 - அதிமுக கூட்டணி யில் திருப்பூர் தெற்கு தொகுதி பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக் கப்பட்டிருக்கும் நிலை யில், முறையாக அக் கட்சித் தலைமை வேட் பாளரை அறிவிப்பதற்கு முன்பே அக்கட்சிக் குள் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் சமூக ஊடகங்களில் திருப்பூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் என்று காடேஸ்வரா எஸ். தங்கராஜ் படம் போட்டு பரப்பப்பட்டு வருகிறது. புதன்கிழமை இரவு தாரா புரம் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி யுள்ளனர். இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சி யின் மாநிலப் பொதுச் செயலாளர் முருகானந்தம் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிடப் போவதாக மற்றொரு தரப்பினர் சமூக ஊடகங்களில் பரப்பி வந்தனர். இவர் ஏற்கெனவே திருப்பூர் நாடா ளுமன்றத் தொகுதி வேட்பாளராக கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்த லில் போட்டியிட்டு தோல்வி அடைந் தவர் ஆவார். சமூக ஊடகங்களில் ஒரே தொகு திக்கு இரு வேட்பாளர்கள் பாஜக தரப்பினர் பரப்பி வந்த நிலையில் பார்ப்பவர்கள் குழப்பம் அடைந்தனர். இது குறித்து அக்கட்சி வட்டாரத்தில் விசாரித்தபோது, காடேஸ்வரா தங்க ராஜ், முருகானந்தம் இருவருமே சென்னை கமலாலயத்தில் சீட் பெறு வதற்காக தீவிர முயற்சி மேற்கொண் டிருப்பதாக கூறினர். குறிப்பாக இந்து முன்னணியின் மாநிலத் தலை வர் காடேஸ்வரா சுப்பிரமணியத்தின் மகனான தங்கராஜ் இத்தொகுதியில் ரூ.40 கோடி வரை செலவு செய்து எப்படியாவது வெற்றி பெற வேண் டும் என தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேட்பாளர் எப்போது அறிவிக்கப் படுவார்கள் என்று கேட்டபோது, வியாழக்கிழமை அஷ்டமி, வெள்ளிக் கிழமை நவமி என்பதால் கட்டாயம் அறிவிக்கமாட்டார்கள். அதற்குப் பிறகே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறினர். எனினும் அதைப்பற்றி அலட்சிக்கொள்ளாமல் சமூக ஊடகங்களில் தங்கராஜ், முரு கானந்தம் என்று பரப்பி குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.</p>
