தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்கத்தில் சிபிஎம் அலுவலகங்கள், வழக்கறிஞர்கள் மீது பாஜக குண்டர்கள் தொடர் தாக்குதல் கொல்கத்தா

5 Oct 2026, 8:32 pm
மேற்கு வங்கத்தில் சிபிஎம் அலுவலகங்கள்,  வழக்கறிஞர்கள் மீது பாஜக குண்டர்கள் தொடர் தாக்குதல் கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் சிபிஎம் அலுவலகங்கள், வழக்கறிஞர்கள் மீது பாஜக குண்டர்கள் தொடர் தாக்குதல்

கொல்கத்தாபாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பின்பு, மேற்கு வங்க மாநிலம் மணிப்பூர் போன்று வன்முறைச் சம்பவங்களின் கூடாரமாக மாறிவிட்டது. குறிப்பாக ஆர்எஸ்எஸ் - பாஜக கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைக் குறிவைத்து பல தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ச்சியாக நிகழ்த்தி வருகிறது.கடந்த 2 வாரங்களில் மட்டும்மேற்கு வங்கத்தின் மாதபங்கா, பச்சிம் மேதினிபூர், ஜல்பைகுரி, ஹவுரா மற்றும் கொல்கத்தாவின் ஆனந்தபூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சிபிஎம் கட்சியின் அலுவலகங்கள் மீது பாஜக குண்டர்கள் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக வெள்ளிக்கிழமை (அக்.2) அன்று பிராட்டியில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்கப் பேரணியில் பாஜக குண்டர்கள் மகாத்மா காந்தி படத்தை அடித்து நொறுக்கியும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

வழக்கறிஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்

இதேபோன்று மேற்கு வங்க வழக்கறிஞர்கள் கவுன்சிலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் ஷமீம் அகமத், சித்தார்த்த சங்கர் மொண்டல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழுவினர் சனிக்கிழமை (அக். 3) இரவு பாஜக குண்டர்களின் கொலைவெறித் தாக்குதலில்காயமடைந்துள்ளனர். மேலும் அவர்களின் 4 வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளானவழக்கறிஞர்கள் அனைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாஜகவின் புல்டோசர் நடவடிக்கைக்கு எதிரான வழக்கை வாதாடி, ஏழை எளியமற்றும் சிறுபான்மையின மக்களின் அடிப்படை வாழ்விற்காகப் போராடி வருகின்றனர்.

தலைவர்களின் கண்டனங்கள்

இந்தத் தாக்குதல் தொடர்பாகசிபிஎம் மூத்த தலைவரும், வழக்கறிகருமான பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா கூறுகையில்,”எங்கள் தோழர்களான ஷமீம் அகமத், சித்தார்த்த சங்கர் மொண்டல் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் குழுவினர் ஒரு கூட்டத்தை நடத்துவதற்காகக் கர்பேட்டாவிற்குச் சென்றனர். அங்கு வழக்கறிஞர்கள் குழு மீது பாஜக குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்காவல்துறை முன்னிலையில் நடைபெற்றது. சட்டத்தின் ஆட்சி என்பது பாஜகஅமைச்சர்கள் மற்றும் அவர்களின் கூலிப்படையினரின்பொழுதுபோக்கிற்காக மட்டும்தானா?” எனக் கண்டனத்துடன், அவர் கேள்வி எழுப்பினார்.

அதே போல காங்கிரஸ் மூத்த தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி,“மக்களுக்காகவும் சட்ட உதவிக்காகவும் நிற்கும் வழக்கறிஞர்களை அச்சுறுத்த நினைப்பது சட்டத்தின் ஆட்சியையே சீர்குலைப்பதாகும்” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி,”மேற்கு வங்கத்தில் வழக்கறிஞர்கள் மீதுநடத்தப்பட்ட தாக்குதல் அதிர்ச்சியளிக்கிறது. பேங்ஷால் மற்றும் பரூய்ப்பூர் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்டதாக்குதல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. மாநிலத்தில் நிகழும்அனைத்து வன்முறைச் சம்பவங்களும் பாஜக கூலிப்படையினரால் நடத்தப்படுகிறது. வழக்கறிஞர்களின் பாதுகாப்பை நிர்வாகம் உறுதிசெய்வதோடு, குற்றவாளிகள் மீது கடுமையான, நடுநிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.