திரிணாமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி மீதும் பாஜகவினர் தாக்குதல் மேற்குவங்கத்தில் நீடிக்கும் பதற்றம்
31 May 2026, 8:07 pm

திரிணாமுல் எம்.பி., கல்யாண் பானர்ஜி மீதும் பாஜகவினர் தாக்குதல் மேற்குவங்கத்தில் நீடிக்கும் பதற்றம்

திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செய லாளரும், மக்களவை உறுப்பினரு மான (ஹார்பர் டயமண்ட்) அபி ஷேக் பானர்ஜி மேற்கு வங்கத்தின் சனி யன்று சோனார்பூர் பகுதிக்கு, தேர்தல் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு தொண்டரின் குடும்பத்தைச் சந்திக்க சென்றிருந்தார்.

அப்போது அங்கு திரண்ட பாஜக கும்பல் “திருடன்” என முழக்க மிட்டு அபிஷேக் பானர்ஜி மீது முட்டை கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தியது.

இந்த சம்பவத்தில் அபிஷேக் பானர்ஜி லேசான காயத்துடன் உயிர்தப்பினார்.

அபிஷேக் பானர்ஜி முன்னாள் முதல மைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் (அண்ணன் மகன்) ஆவார்.

தொடர்ந்து திரிணாமுல் காங்கிர ஸின் மூத்த தலைவரும், எம்.பி.,யுமான கல்யாண் பானர்ஜி மீதும் பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஞாயிறன்று ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சண்டி தலா காவல் நிலையத்திற்கு மனு அளிக்க திரிணாமுல் தொண்டர்களுடன் கல் யாண் பானர்ஜி சென்றிருந்தார்.

காவல் நிலையத்திற்கு வெளியே பாஜகவினர் கல்யாண் பானர்ஜியை “திருடன்” என்று கோஷங்களை எழுப்பினர். அடுத்த சில நிமிடங்களில் திரிணாமுல் - பாஜக குண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் மம்தா பானர்ஜிக்கு மிக நெருக்கமான நண்ப ராக கருதப்படும் கல்யாண் பானர்ஜிக்கு தலையில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக கல்யாண் பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்,”நான் போராட்டக் கூட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, காவித் துண்டு அணிந்த 10-15 பேர் கொண்ட கும்பல் என் மீது தாக்குதல் நடத்தியது. அவர்களில் ஒருவர் என் மீது கல் வீசி னார்” என அவர் குற்றம்சாட்டினார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் அபி ஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மீது ஆளும் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களால் மேற்கு வங்கத் தில் பதற்றமான சூழல் நீடித்து வருகி றது.