தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் தலைவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் வன்முறையாளர்களுக்கு துணை நிற்கும் மேற்கு வங்க காவல்துறை வன்முறையாளர்களுக்கு துணை நிற்கும் மேற்கு வங்க காவல்துறை

8 Jul 2026, 8:36 pm
சிபிஎம் தலைவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் வன்முறையாளர்களுக்கு துணை நிற்கும் மேற்கு வங்க காவல்துறை வன்முறையாளர்களுக்கு துணை நிற்கும் மேற்கு வங்க காவல்துறை

சிபிஎம் தலைவர்கள் மீது பாஜகவினர் தாக்குதல் வன்முறையாளர்களுக்கு துணை நிற்கும் மேற்கு வங்க காவல்துறை வன்முறையாளர்களுக்கு துணை நிற்கும் மேற்கு வங்க காவல்துறை

கொல்கத்தா மேற்கு வங்காளத்தின் கூச் பெஹார் மாவட்டம், சிதல்குச்சி பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (மத்தியக் குழு உறுப்பினர் மீனாட்சி முகர்ஜி தலைமையிலான குழுவினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பசு பாதுகாப்பு என்ற பெயரில் உலாவரும் இந்துத்துவா கலவர கும்பலால் கடந்த வாரம் சிபிஐ(எம்) ஊழியரான கால்நடை மேய்ப்பாளர் மோந்து மியா கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற மீனாட்சி முகர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அப்பகுதிக்கு சென்றிருந்தனர். குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு, ‘எஸ்ஐஆர்’ (SIR) நடைமுறை மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டவர்கள் பங்கேற்கும் பேரணியை வழிநடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அவர் கட்சித்தலைவர்களுடன் சென்றுகொண்டிருந்தார். அப்போது, பாஜகவினர் மற்றும் ஆதரவாளர்கள் மீனாட்சி முகர்ஜி பயணித்த வாகனத்தின் மீது முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின் போது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியவர்களை தடுக்காமலும் வேறு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமலும் வேடிக்கை பார்த்தனர். வன்முறையாளர்களின் தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த காவல்துறையினரை கண்டித்தும் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் மீனாட்சி முகர்ஜி மற்றும் கட்சி உறுப்பினர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பிறகே காவல்துறை தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகமது சலீம் கண்டனம்

இந்தச் சம்பவம் குறித்து கொல்கத்தாவில் உள்ள முசாஃபர் அகமது பவனில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ(எம்) மேற்கு வங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், இந்தக் கோழைத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டித்தார். பாஜக அரசு மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை மற்றும் அச்சுறுத்தல் நிறைந்த சூழலை உருவாக்குகிறது. முந்தைய திரிணா முல் காங்கிரஸ் அரசாங்கம் ஆயுதப் பலத்தைப் பயன்படுத்தியது போல, தற்போது பாஜக கும்பல் வன்முறை மூலம் அரசியல் எதிரிக ளை ஒடுக்க முயற்சிக்கிறது. சாதாரண குடிமக்களின் பாதுகாப்பை பாஜக அரசு உறுதி செய்யத் தவறி விட்டது என கடுமையாக விமர்சித்துள்ளார். காவல்துறையினர் அதிகாரத்தில் இருப்பவர்க ளின் நலனுக்காகவே செயல்படுவதால், உடனடியாக விரிவான காவல்துறை சீர்திருத்தங்கள் தேவை என்று மாநிலச் செயலாளர் முகமது சலீம் வலியுறுத்தியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.