பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி!
14 Nov 2025, 1:26 pm
<p><strong>பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி!</strong></p>
<p>பாட்னா, நவ. 14 - பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - ஜனதா தளம் கூட்டணி, கருத்துக்கணிப்பு களையும் தாண்டி 200-க்கும் அதிகமான தொகுதிகளைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மைக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி பாஜக 90 இடங்கள், அதன் கூட்டணிக் கட்சிகளான நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சி 84 இடங்கள், லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) 19 இடங்கள், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா (எஸ்) 5 இடங்கள், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4 இடங் கள் என ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களைப் பெற்றிருந்தது. தேஜஸ்வி தலைமையிலான மகாகத் பந்தன் கூட்டணியைப் பொறுத்தவரை, ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 இடங்கள், காங்கிரஸ் 6 இடங்கள், சிபிஐ(எல்-எல்) லிபரேசன் 2 இடங்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1 என மொத்தம் 34 இடங்களையே பெற முடிந்தது. இவை தவிர, ஒவைசி தலைமையிலான மஜ்லிஸ் கட்சி 5 இடங்கள், ஐஐபி 1, பகுஜன் சமாஜ் கட்சி 1 என 7 இடங்களைப் பெற்றன. சதவிகித அடிப்படையில், பாஜக 20.19 சதவிகிதம், ஜேடியு 19.20 சதவிகிதம், எல்ஜேபி 5.04 சதவிகிதம் என வாக்குகளைப் பெற்றுள்ளன. எதிர்க்கட்சி கூட்டணியைப் பொறுத்தவரை ஆர்ஜேடி 22.88 சதவிகித வாக்குகளையும், காங்கிரஸ் 8.75 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளன.</p>
<p> </p>
