பாஜக - அதிமுகவின் ‘தமிழ்’ வேடம் அம்பலம்!
12 Apr 2026, 5:30 am

பாஜக - அதிமுகவின் ‘தமிழ்’ வேடம் அம்பலம்!

தமிழுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகப் பேசி வரும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-வினரின் நிஜ முகம் திருப்பூரில் அப்பட்டமாகத் தெரிந்தது. தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, மத்திய அமைச்சர் உள்ளிட்ட வேட்பாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ‘ஸ்நாக்ஸ்’ சாப்பிட்டுக்கொண்டிருந்தது சபையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உள்ள அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தொழில் துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துகொண்டு, பா.ஜ.க வேட்பாளர்கள் எல். முருகன், காடேஸ்வரா தங்கராஜ் மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது மேடைக்கு அருகில் இருந்த ரவுண்ட் டேபிளில் அமர்ந்திருந்த மத்திய அமைச்சர் எல். முருகன் மற்றும் அ.தி.மு.க, பா.ஜ.க வேட்பாளர்கள் எழுந்து நிற்காமல், ஹாயாக நாற்காலியில் அமர்ந்து பலகாரங்களைச் சாப்பிட்டு கொண்டிருந்தனர். தமிழ்த்தாய் வாழ்த்துக்குக் குறைந்தபட்ச மரியாதையைக் கூட அளிக்காமல் இவர்கள் அலட்சியமாக இருந்தது அங்கிருந்தவர்களை முகம் சுளிக்க வைத்தது.

பா.ஜ.க-வினரின் தமிழ் பாசம் என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாகும். பா.ஜ.க-வினரைப் போலவே அ.தி.மு.க வேட்பாளரும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்தது, அந்தக் கட்சி எத்தகைய தரம் தாழ்ந்த நிலைக்குச் சென்றுள்ளது என்பதைக் காட்டுகிறது. தமிழைத் தூக்கிப் பிடிப்பதாக நாடகமாடும் இக்கட்சி வேட்பாளர்களின் உண்மை நிலையைத் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.