தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மசூதியைச் சுற்றியுள்ள கட்டங்கள் நள்ளிரவில் புல்டோசர்கள் மூலம் இடிப்பு பாஜக நிர்வாகம்

7 Jan 2026, 3:23 pm
மசூதியைச் சுற்றியுள்ள கட்டங்கள் நள்ளிரவில் புல்டோசர்கள் மூலம் இடிப்பு பாஜக நிர்வாகம்
<p><strong>மசூதியைச் சுற்றியுள்ள கட்டங்கள் நள்ளிரவில் புல்டோசர்கள் மூலம் இடிப்பு பாஜக நிர்வாகம்</strong></p> <p>அட்டூழியம் பழைய தில்லியின் துர்க்மான் கேட் &nbsp;(Turkman Gate) பகுதியில் உள்ள &nbsp;ஃபைஸ்-இ-இலாஹி மசூதியைச் சுற்றியுள்ள கட்டடங்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தில்லி மாநகராட்சி நள்ளி ரவில் இடித்து தள்ளியுள்ளது. &nbsp; ஃபைஸ்-இ-இலாஹி மசூதி சுமார் 100 &nbsp;ஆண்டுகள் பழமையானது. 1940-ஆம் &nbsp;ஆண்டு ஒப்பந்தப்படி மசூதிக்கு 0.195 &nbsp;ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள் ளது. அதற்கு அப்பாற்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்பு என்றும், மசூதி &nbsp;நிலத்தை திருமண மண்டபமாகவோ அல்லது கிளி னிக் ஆகவோ பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றும் மாநகராட்சி தெரி வித்து வந்தது. அது மட்டுமின்றி &nbsp;இந்த &nbsp;மசூதி வளாகத்தில் சுமார் 30,000 சதுர &nbsp;மீட்டர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது &nbsp;எனவும் கூறியது. &nbsp;இது தொடர்பான வழக்கு தில்லி &nbsp;உயர் நீதிமன்றத்திலும் உள்ளது. உயர்நீதி மன்றத்தில் மசூதி கமிட்டி தாக்கல் செய்த &nbsp;மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொண்ட சில &nbsp;மணி நேரங்களிலேயே அதாவது செவ் &nbsp;வாய்க்கிழமை நள்ளிரவில் 17 புல்டோ சர்கள் மூலமாக &nbsp;இடித்துத் தள்ளியுள்ளது &nbsp;பாஜக தலைமையிலான தில்லி மாநக ராட்சி. நீதிமன்ற உத்தரவு இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்பே, நள்ளிரவில் இவ்வளவு அவசர மாக இடிக்க வேண்டிய அவசியம் என்ன? &nbsp;என்று மசூதி தரப்பு வழக்கறிஞர் கேள்வி &nbsp;எழுப்பியுள்ளார். பாஜக அரசு தொடர்ந்து முஸ்லிம்கள் &nbsp;உள்ளிட்ட &nbsp;மதசிறுபான்மையினர், தலித், &nbsp;பழங்குடி மக்களின் மீது தாக்குதல் நடத்தி &nbsp;வருவதுடன் அவர்களின் பொருளாதா ரத்தையும் திட்டமிட்டு சிதைத்து வரு கிறது. அதன் ஒரு பகுதியாகவே அவர்கள் &nbsp;ஆளும் மாநிலங்களில் தண்டனை என்ற &nbsp;பெயரில் &nbsp;பாஜக அரசு இடித்துத் தள்ளி வரு கிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.