தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கேரளத்தில் பாஜகவின் புதிய வேடம்... கிறிஸ்தவ வாக்குகளுக்கு ‘வலை’!

21 Mar 2026, 2:42 pm
கேரளத்தில்  பாஜகவின் புதிய வேடம்...  கிறிஸ்தவ  வாக்குகளுக்கு ‘வலை’!
<p><strong>கேரளத்தில் &nbsp;பாஜகவின் புதிய வேடம்... &nbsp;கிறிஸ்தவ &nbsp;வாக்குகளுக்கு &lsquo;வலை&rsquo;!</strong></p> <p>வட இந்தியாவில் பசு பாதுகாப்பு, மாட்டிறைச்சி தடை என மதவெறியைத் தூண்டும் பாஜக, கேரளாவில் மட்டும் அப்படியே தலைகீழாக மாறி, கிறிஸ்தவ சமூகத்தின் &ldquo;பாதுகாவலன்&rdquo; போலப் புதிய வேடமிட்டுத் திரிகிறது. மதவாதக் கணக்கு கேரள மக்கள் தொகையில் 18.4% உள்ள கிறிஸ்தவ வாக்குகளைக் கவர்வதே பாஜகவின் தற்போதைய &lsquo;மாஸ்டர் பிளான்&rsquo;. இதற்காக இம்முறை முன்னெப்போதும் இல்லாத வகையில் 7 கிறிஸ்தவ வேட்பாளர்களை பாஜக களம் இறக்கியுள்ளது. மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் (காஞ்சிரப்பள்ளி), பி.சி. ஜார்ஜ் (பூஞ்சார்), அனூப் ஆண்டனி ஜோசப் (திருவல்லா) உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் முக்கிய முகங்கள். இரட்டை வேடம் அம்பலம் J முனம்பம் விவகாரம்: வக்ஃப் வாரியம் தொடர்பான நிலப் பிரச்சினையில் கிறிஸ்தவ சமூகத்திற்கு ஆதரவாக நிற்பது போலக் காட்டி, மதங்களுக்கிடையே பகையை வளர்க்க பாஜக திட்டமிடுகிறது. J வட இந்தியா (எதிர்) கேரளா: சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் கன்னியாஸ்திரிகள் மீது பொய் வழக்கு போட்டுச் சிறையில் அடைக்கும் அதே பாஜக, கேரளாவில் மட்டும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது போன்ற இரட்டை வேடம் போடுகிறது. மாட்டி றைச்சி போன்ற தங்களது &lsquo;முக்கிய&rsquo; கொள்கைகளைக் கேரளாவில் மட்டும் மூட்டை கட்டி வைத்துள்ளதே இவர்களின் சந்தர்ப்பவாத அரசியலுக்குச் சாட்சி. மக்களின் பதில் மத நல்லிணக்கமே வாழ்வியலாகக் கொண்ட கேரளாவில், பாஜகவின் இந்தத் திடீர் பாசத்தை மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றனர். &ldquo;பாஜக எப்போதும் மதம் பிடித்தே திரிகிறது; வட இந்தியாவில் ஒரு முகம், கேரளாவில் ஒரு முகம் என ஆடும் இவர்களின் நாடகம் இம்முறை எடுபடாது&rdquo; என இடதுசாரித் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தில் எச்சரித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் பலவீனமடைந்துள்ள சூழலைப் பயன்படுத்தி, சிறுபான்மையினரைத் தன் பக்கம் இழுக்க பாஜக போடும் இந்த &lsquo;சதுரங்க வேட்டை&rsquo; கேரள மண்ணில் தோல்வியைத் தழுவுவது உறுதி.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.