பாஜகவின் “மறதி பல்டி” தர்பார் திருப்பூரில் அரங்கேற்றம்!
10 Jan 2026, 2:48 pm
<p><strong>பாஜகவின் “மறதி பல்டி” தர்பார் திருப்பூரில் அரங்கேற்றம்!</strong></p>
<p>திருப்பூர், ஜன.10– பின்னலாடை நகரமான திருப் பூரில் கடந்த வெள்ளியன்று நடை பெற்ற பாஜக பொதுக்கூட்டம், அர சியல் வரலாற்றில் ஒரு ‘மறதித் திரு விழாவாக’ கொண்டாடப்பட்டது. மேடையில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், தற் போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் போட்டி போட்டுக் கொண்டு உண்மைகளை “வசதி யாக” மறந்து பேசியது, அங்கிருந்த வர்களுக்கு உலக மகா ஆச்சரி யத்தை அளித்தது. முதலில் மைக் பிடித்த அண்ணா மலை, தமிழகத்தின் கடன் சுமையை பற்றி புள்ளிவிவரங்களை புய லெனக் கிளப்பினார். “திமுக ஆட்சி யில் கடன் உயர்ந்துவிட்டது, இதற்கு எத்தனை காலம்தான் முந்தைய அதிமுக ஆட்சியைக் காரணம் சொல்வீர்கள்?” என்று வீராவேச மாகக் கேட்டார். ஆனால், அதே நாவால், 11 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ.55 லட்சம் கோடியிலிருந்து ரூ.196 லட்சம் கோடியாக எகிறியதற்கு இன் னும் நேருவையும், காங்கிரஸை யும் காரணம் சொல்லிக்கொண்டி ருப்பதை அவர் சொல்லவே இல்லை. திருப்பூர் மாவட்டம் ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித் தருவதாகவும், குப்பை கிடங்கு இங்குள்ள முக் கிய பிரச்சனை எனவும் குறிப்பிட் டார். அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரின் வருவாய் பாதிக்கப்பட் டுள்ளது குறித்தும், அதற்கான ஒன் றிய அரசின் நடவடிக்கைகள் குறித் தும் விளக்கமளிக்கவில்லை. ‘தனக்கு வந்தால் ரத்தம், தம்பிக்கு வந்தால் தக்காளி சட்னி’ என்பது இதுதானோ? தூய்மை நகரமாக மத்தியப் பிர தேசத்தின் இந்தூரை அண்ணா மலை சிலாகித்துப் பேசினார். பாவம், அதே இந்தூரில் கழிவுநீர் கலந்த தண்ணீரைக் குடித்து 14க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கதையையும், நூற்றுக்கும் மேற்பட் டோர் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டதும், பாஜக ஆளும் தில் லியில் ஆக்சிஜனுக்குப் பதில் புகையை சுவாசிக்கும் அவலத்தை யும் அவர் ‘சைலன்ட் மோடுக்கு’ மாற்றிவிட்டார். அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரின் வருவாய் பாதிக்கப்பட்டது பற்றிப் பேசினால், ஒன்றிய அரசின் ‘சாதனை’ அம்பல மாகிவிடுமே என்ற பயம்போலும்! சமூக வலைதளங்களில் “பழ மையான கோயில் இடிப்பு” என்று தீயாய் வதந்தியைப் பரப்பிய அண் ணாமலையும், நயினார் நாகேந்தி ரனும், அந்த கோவில் இருந்த தாக சொல்லப்படும் இடத்திலி ருந்து வெறும் 7 கி.மீ தொலைவில் நின்று கொண்டு அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 122 ஏழை மக்களின் நிலத்தைப் பறிக்க நடந்த முயற்சிதான் அது என்ற உண்மை அம்பலமானதால், இரு தலைவர்களுக்கும் திடீர் ‘மறதி’ நோய் தாக்கிவிட்டதாக அரசியல் செயற்பாட்டினர் கிண்டலடித்து சென்றனர். அண்ணாமலையை விட ஒரு படி மேலே சென்ற நயினார் நாகேந் திரன், “தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் இந்தியில் பெயர் பலகை வைத்துள்ளது” என ஒரு ‘மெகா’ பொய்யை அவிழ்த்து விட் டார். அடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் லாகூரில் மோடி குண்டு வைத்து தீவிரவாதிகளை அழித்து விட்டார் என்று மார்தட்டினார். அவர் பேசி முடிப்பதற்குள் தில்லியில் கார் குண்டு வெடித்தது எப்படி என்ற லாஜிக் கேள்வியை அவர் லாகூ ருக்கே பார்சல் செய்துவிட்டார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று வருத் தப்பட்ட அண்ணாமலைக்கு, உன் னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான பாஜக எம்எல்ஏ-வாக இருந்தவருக்கு ஜாமீன் கிடைத்தபோது அவர் கட்சி யினர் கொண்டாடியது மட்டும் ஏனோ கண்ணுக்குத் தெரியவில்லை. திருப்பூர் பொதுக்கூட்டம் என் பது மக்களின் பிரச்சனைகளைப் பேசுவதை விட, பாஜக ஆளும் மாநி லங்களில் நடக்கும் அவலங்களை தமிழ்நாட்டில் நடப்பதாக ‘டப்பிங்’ கொடுக்கும் முயற்சியாகவே அமைந்தது.</p>
