பாஜகவின் “மறதி பல்டி” தர்பார்
10 Jan 2026, 2:48 pm
<p><strong>பாஜகவின் “மறதி பல்டி” தர்பார்</strong></p>
<p>திருப்பூர், ஜன. 10 – பின்னலாடை நகரமான திருப்பூரில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டம், அரசியல் வரலாற்றில் ஒரு ‘மறதித் திருவிழாவாக’ கொண்டாடப்பட் டது. மேடையில் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், தற்போதைய தலைவர் நயினார் நாகேந்திரனும் போட்டி போட்டுக் கொண்டு உண்மைகளை “வசதியாக” மறந்து பேசியது, அங்கிருந்தவர்களுக்கு உலக மகா ஆச்சரியத்தை அளித்தது. முதலில் மைக் பிடித்த அண்ணாமலை, தமிழகத்தின் கடன் சுமையைப் பற்றிப் புள்ளி விவரங்களைப் புயலெனக் கிளப்பினார். “திமுக ஆட்சியில் கடன் உயர்ந்துவிட்டது, இதற்கு எத்தனை காலம்தான் முந்தைய அதி முக ஆட்சியைக் காரணம் சொல்வீர்கள்?” என்று வீராவேசமாகக் கேட்டார். ஆனால், அதே நாவால், 11 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ. 55 லட்சம் கோடியிலி ருந்து ரூ.196 லட்சம் கோடியாக எகிறியதற்கு இன்னும் நேருவையும், காங்கிரஸையும் கார ணம் சொல்லிக்கொண்டிருப்பதை அவர் சொல்லவே இல்லை. திருப்பூர் மாவட்டம் ஆண்டுக்கு ரூ.80 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டித் தருவதாகவும், குப்பை கிடங்கு இங் குள்ள முக்கிய பிரச்சனை எனவும் குறிப் பிட்டார். அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூ ரின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது குறித் தும், அதற்கான ஒன்றிய அரசின் நடவடிக்கை கள் குறித்தும் விளக்கமளிக்கவில்லை. ‘தனக்கு வந்தால் ரத்தம், தம்பிக்கு வந்தால் தக்காளி சட்னி’ என்பது இதுதானோ? தூய்மை நகரமாக மத்தியப் பிரதேசத்தின் இந்தூரை அண்ணாமலை சிலாகித்துப் பேசி னார். பாவம், அதே இந்தூரில் கழிவுநீர் கலந்த தண்ணீரைக் குடித்து மக்கள் 14 க்கு மேற் பட்டோர் உயிரிழந்த கதையையும், நூற்றுக் கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டதும், பாஜக ஆளும் தில்லியில் ஆக்சிஜனுக்குப் பதில் புகையை சுவாசிக்கும் அவலத்தையும் அவர் ‘சைலன்ட் மோடுக்கு’ மாற்றிவிட்டார். அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரின் வருவாய் பாதிக்கப்பட்டது பற்றிப் பேசினால், ஒன்றிய அரசின் ‘சாதனை’ அம்பலமாகிவிடுமே என்ற பயம் போலும்! சமூக வலைதளங்களில் “பழமையான கோயில் இடிப்பு” என்று தீயாய் வதந்தியைப் பரப்பிய அண்ணாமலையும், நயினார் நாகேந்திரனும், அந்த கோயில் இருந்த தாக சொல்லப்படும் இடத்திலிருந்து வெறும் 7 கி.மீ தொலைவில் நின்று கொண்டு அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேச வில்லை. 122 ஏழை மக்களின் நிலத்தைப் பறிக்க நடந்த முயற்சிதான் அது என்ற உண்மை அம்பலமானதால், இரு தலைவர்க ளுக்கும் திடீர் ‘மறதி’ நோய் தாக்கிவிட்டதாக அரசியல் செயற்பாட்டினர் கிண்டலடித்து சென்றனர். அண்ணாமலையை விட ஒரு படி மேலே சென்ற நயினார் நாகேந்திரன், “தமிழக அரசு டாஸ்மாக் கடைகளில் இந்தியில் பெயர் பலகை வைத்துள்ளது” என ஒரு ‘மெகா’ பொய்யை அவிழ்த்து விட்டார். அடுத்து, ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் லாகூரில் மோடி குண்டு வைத்துத் தீவிரவாதிகளை அழித்து விட்டார் என்று மார்தட்டினார். அவர் பேசி முடிப்பதற்குள் டெல்லியில் கார் குண்டு வெடித்தது எப்படி என்ற லாஜிக் கேள்வியை அவர் லாகூருக்கே பார்சல் செய்துவிட்டார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று வருத்தப்பட்ட அண்ணாம லைக்கு, உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியான பாஜக எம்.எல். ஏ-வுக்கு ஜாமீன் கிடைத்தபோது அவர் கட்சியி னர் கொண்டாடியது மட்டும் ஏனோ கண்ணுக் குத் தெரியவில்லை. திருப்பூர் பொதுக்கூட்டம் என்பது மக்க ளின் பிரச்சனைகளைப் பேசுவதை விட, பாஜக ஆளும் மாநிலங்களில் நடக்கும் அவ லங்களைத் தமிழ்நாட்டில் நடப்பதாக ‘டப் பிங்’ கொடுக்கும் முயற்சியாகவே அமைந் தது.</p>
