தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகளிர் இடஒதுக்கீட்டில் பா.ஜ.க-வின் சாணக்கியச் சதி! மாரீச வேடம் எடுபடாது

6 Apr 2026, 4:15 pm
மகளிர் இடஒதுக்கீட்டில் பா.ஜ.க-வின் சாணக்கியச் சதி! மாரீச வேடம் எடுபடாது
<p><strong>மகளிர் இடஒதுக்கீட்டில் பா.ஜ.க-வின் சாணக்கியச் சதி! மாரீச வேடம் எடுபடாது</strong></p> <p>பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்பு எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை நாடு அறியும். ஆனால், தேர்தல் வந்துவிட்டால் பெண்களின் நலன் விரும்பிகளாகப் பிரதமர் மோடி உள்ளிட்டோர் நடிக்கத் தொடங்கிவிடு வார்கள். கேரளத்தின் திருவல்லா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், &ldquo;பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் முன்னுரிமை&rdquo; என முழங்கியுள்ள பிரதமர், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதாவிற்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். தேர்தல் காலத் தந்திரம் தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஏப்ரல் 16 முதல் 18 வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடரை பா.ஜ.க அரசு திட்டமிட்டு நீட்டித்துள்ளது. &ldquo;ஆதாயம் இல்லாமல் ஆத்தை கட்டி இறைப்பார்களா&rdquo; என்ற பழமொழிக்கு ஏற்ப, தேர்தல் ஆதாயத்திற்காகவே 33 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தைப் பிரதமர் கையில் எடுத்துள்ளார். 2023 செப்டம்பரிலேயே அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், இப்போது திருத்தக் கோருவது இவர்களின் திட்டமிடப்படாத அவசரக் கோலத்தையே காட்டுகிறது. மநுநீதிச் சதி இந்த இடஒதுக்கீடு அடுத்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பின்புதான் அமலுக்கு வரும். 2011-இல் நடக்க வேண்டிய கணக்கெடுப்பு இப்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது; அது 2027 மார்ச் மாதமே முடியும். உண்மை நிலை இவ்வாறிருக்க, இப்போதே வாக்கு அறுவடை செய்யத் துடிப்பது அப்பட்டமான பாசாங்கு. தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிஸியாக இருக்கும்போது கூட்டத்தொடரை நடத்துவது ஒரு &lsquo;சாணக்கியச் சதி&rsquo;. அவர்கள் வராவிட்டால் &ldquo;பெண்கள் நலனில் அக்கறையில்லை&rdquo; எனப் பழிபோடலாம் என்பதே பா.ஜ.க-வின் கணக்கு. இது பெண்கள் மீதான பாசமல்ல, மநுநீதிச் சிந்தனை கொண்ட ஆர்.எஸ்.எஸ்-இன் திரைமறைவுத் திட்டம். இவர்களின் மாரீச வேடம் மக்களிடம் எடுபடாது! - ப. முருகன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.