முந்தய பக்கம்

கூரையை உடைத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்

10 Apr 2026, 5:30 am
கூரையை உடைத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்

கூரையை உடைத்து வீட்டிற்குள் விழுந்த காட்டெருமை: சிறுவன் படுகாயம்

உதகை, ஏப்.9- உதகை அருகே குன்னூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரையை உடைத்து காட்டெருமை விழுந்ததில் 7 வயது சிறுவன் படுகாயமடைந்தான்.

நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து வருகின்றன. இந்நிலையில், குன்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், நள்ளிரவில் காட்டெருமை ஒன்று வீட்டின் கூரையை உடைத்து உள்ளே விழுந்தது.

இதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் படுகாயமடைந்தான். சிறுவன் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். வனத்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram