பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து
6 Apr 2026, 4:15 pm
<p><strong>பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து</strong></p>
<p>நாகர்கோவில், ஏப். 6- மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் பத்ம நாபபுரம் சட்டமன்ற தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர். செல்லசுவாமிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் மற்றும் திரு விதாங்கோடு ஜும்மா மசூதி தலைமை இமாம் உள்ளிட் டோர் வெற்றிபெற வாழ்த்து களை தெரிவித்தனர். மார்த்தாண்டத்தில் ஏப்ரல் 6 திங்களன்று கிறிஸ் தவ ஐக்கிய பேரவைத் தலைவர் மலங்கரை ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார். வேட்பாளருடன் அமை ச்சர் த.மனோ தங்கராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார் மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமா றோஸ், சிபிஎம் தக்கலை வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் ஆகியோர் உடனிருந்தனர். இதுபோல் குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்க சபை ஆயர் ஆல்பர்ட் ஜி. ஏ.அனஸ்தஸ், கி.பி.63 ஆம் ஆண்டில் புனித தோமைய ரால் கட்டப்பட்டதாக கூறப் படும் தொன்மையும் பாரம் பரியமும் மிக்க அரப்பள்ளி தேவாலயத்தின் நிர்வாகி பார்ஸ்லீபி ரேம்பன், திருவிதாங்கோடு மகான் மாலிக் முகம்மது ஜும்மா மசூதி தலைமை இமாம் சுல்பிகர் அலி, ஆகியோர் வேட்பாளர் ஆர்.செல்ல சுவாமி வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தனர். </p>
