தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து

8 Apr 2026, 5:30 am
பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து

பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு ஆயர்கள், திருவிதாங்கோடு இமாம் வாழ்த்து

நாகர்கோவில், ஏப். 7- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பத்மநாபபுரம் தொகுதி சிபிஎம் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் மற்றும் திருவிதாங்கோடு ஜமாஅத் தலைவர்கள் இமாம் உள்ளிட்டோர் வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மார்த்தாண்டத்தில் உள்ள சிஎஸ்ஐ கன்னியாகுமரி பேராயத்தின் பேராயர் ஏ.ஆர்.செல்லையா, மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், மார்த்தாண்டம் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தனர். வேட்பாளருடன் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி.பெல்லார்மின், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாரோஸ், சிபிஎம் தக்கலை வட்டாரச் செயலாளர் சுபாஷ் பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

இதேபோல் குழித்துறை மறை மாவட்ட கத்தோலிக்க சபை ஆயர் ஜேம்ஸ் ஆர்.ஆனந்தராஜ், சிபிஎம் ஆயர் ஆண்டனி புனித் நேசையன் உள்ளிட்டோரைச் சந்தித்துப் பொன்னாடை போர்த்தி ஆதரவு திரட்டினர். அப்போது அவர்கள் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமி வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தனர். திருவிதாங்கோடு ஜமாஅத் பள்ளிவாசல் தலைமை இமாம் மற்றும் ஜமாஅத் நிர்வாகிகள் வேட்பாளர் ஆர்.செல்லசுவாமிக்கு வெற்றிபெற வாழ்த்துத் தெரிவித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.