பிர்சா முண்டா-வின் 150 ஆவது பிறந்தநாள் விழா
15 Nov 2025, 4:09 pm
<p><strong>பிர்சா முண்டா-வின் 150 ஆவது பிறந்தநாள் விழா</strong></p>
<p>தருமபுரி, நவ.15- பழங்குடியின போராளி பிர்சா முண்டா-வின் 150 ஆவது பிறந்தநாள் சனியன்று கொண்டாடப்பட்டது. பழங்குடி மக்களின் உரிமைக ளுக்காக போராடி உயிர்நீத்த பிர்சா முண்டா-வின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டியில் நடைபெற்ற இந்நிகழ் விற்கு, மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் சி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார். பொருளாளர் எஸ். நாகராஜூ, நிர்வாகிகள் வெங்கடேசன், தமிழரசு, ஜீவானந்தம், மணி, விமலா, தீர்த்தகிரி ஆகியோர் பங்கேற்று சிறப்பு ரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு சோ. அருச்சுணன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.என்.மல்லை யன். வட்டச் செயலாளர் தனுஷன், விவ சாயிகள் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
