பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைப்பணி
24 May 2026, 1:17 am
<p><strong>பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைப்பணி</strong></p><p>ஈரோடு, மே 23- பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கர்நாடகா விலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் வாகனங்களுக்கு கால் நடைத்துறை சார்பில், மருந்து தெளிக்கும் பணி நடை பெற்று வருகிறது. கர்நாடகா, கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்கள் பரவும் காலங்களில், தமிழ்நாட்டிலுள்ள மாநில எல்லைகளில் கால் நடைத்துறை சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள் ளப்படுவது வழக்கம். அதன்படி, கர்நாடகா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் அறிகுறி உள்ளதால், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடியில் கால்நடைத் துறை சார்பில் முகாம் அமைக்கப்பட்டு, கடந்த சில நாள்களாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ் நாட்டிலிருந்து கோழித்தீவனம் மற்றும் கோழிகள் பாரம் ஏற்றிக்கொண்டு கர்நாடகா சென்று மீண்டும் தமிழ்நாடு திரும் பும் வாகனங்களை நிறுத்தி விவரங்கள் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்த வாகனத்துக்கு மருந்து தெளிக்கும் பணியில் கால்நடைத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தின மும் காலை முதல் மாலை வரை இப்பணி நடைபெற்று வருவ தாகவும், இதன்மூலமாக நோய் தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
