ஆபத்தில் சிக்கிய நாரையை மீட்ட பறவை ஆர்வலர்
28 Sept 2026, 1:03 am

ஆபத்தில் சிக்கிய நாரையை மீட்ட பறவை ஆர்வலர்

திருப்பத்தூர், செப். 27 -திருப்பத்தூர் பெரிய ஏரியில் வாயில் ரிப்பன் மாட்டி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த சாம்பல் நாரை பறவையை, பறவைக் குழுத் தலைவர் பசுமை சத்யராஜ் குச்சியைப் பயன்படுத்தி பத்திரமாக மீட்டுக் காப்பாற்றினார்.

ஏரிக்குள் இறங்கி நாரையின் உடலில் சுற்றியிருந்த ரிப்பனை அகற்றி, அதனைச் சூரிய ஒளியில் காய வைத்துச் சுதந்திரமாகப் பறக்கச் செய்தார். பறவையின் உயிரைக் காப்பாற்றிய அவரது செயலை அப்பகுதி பொதுமக்கள்வெகுவாகப் பாராட்டினர்.