தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி பயோ-மெட் ஹெல்த்கேர் ஆலைத் தொழிலாளர்களின் மாற்றுப் போராட்டமும் வெற்றியும்
7 Oct 2026, 9:01 pm

தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணமிக்க எழுச்சி

பயோ-மெட் ஹெல்த்கேர் ஆலைத் தொழிலாளர்களின் மாற்றுப் போராட்டமும் வெற்றியும்

வேலைநிறுத்தம் 68

“பணவீக்கம் உச்சத்தில் இருக்கும் இந்தக் காலத்தில் வெறும் சொற்ப ஊதியத்தை வைத்துக் கொண்டு எப்படி குடும்பத்தை நடத்த முடியும்? எங்கள் உழைப்புக்கான நியாயமான ஊதியத்தை உடனே உயர்த்தி வழங்க வேண்டும்!” — உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் சிட்குல் (SIDCUL) தொழில் மண்டலத்தில் அமைந்துள்ள பிரபல மருத்துவ சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான ‘பயோ-மெட் ஹெல்த்கேர் ப்ராடக்ட்ஸ்’ (Bio-Med Healthcare Products) ஆலை வாயிலில் தொழிலாளர்கள் எழுப்பிய ஆவேசமான வர்க்கக் குரல் இதுவாகும்.

மற்ற ஆலைகளைப் போல முழுமையான வேலைநிறுத்தத்தில் ஈடுபடாமல், உற்பத்தியைப் பாதிக்கச் செய்யாமல், தொடர் வாயில் தர்ணா (Gate Dharna)போராட்டம் மூலம் நிர்வாகத்தைப் பணிய வைத்துத் தங்களின் கோரிக்கைகளை வென்றெடுத்த பயோ-மெட் ஆலைத்தொழிலாளர்களின் தனித்துவமான போராட்டம் குறித்த ஒரு விரிவான பார்வை.

ஆலையின் பின்னணியும் உற்பத்தியும்

2002-ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட பயோ-மெட் ஹெல்த்கேர் நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ உபகரணங்களைத் தயாரித்து 65-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் ஹரித்துவார் ஆலையில் சுமார் 1,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 25 முதல் 30 சதவீதப் பணியாளர்கள் மட்டுமே நிரந்தரப் பணியாளர்கள்; மீதமுள்ள பெரும்பான்மையா னோர் ஒப்பந்தத் தொழிலாளர்களாவர். குறிப்பாக, இப்பணிமனையில் 30 முதல் 40 சதவீதப் பெண் தொழிலாளர்கள் துல்லியமான சோதனைகள் மற்றும் மருத்துவப் பேக்கிங் பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உற்பத்திக்குப் பாதிப்பின்றித் தொடர்ந்த கோரிக்கை போராட்டம்

வடஇந்தியத் தொழில் நகரங்களில் வீசிய வேலைநிறுத்த அலைகளின் தாக்கத்தாலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசியைக் காரணமாகக் காட்டியும் ஏப்ரல் மாத இறுதியில் பயோ-மெட் ஒப்பந்தத் தொழி லாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

மருத்துவக் கருவிகள் தயாரிப்பு என்பதால், ஆலை முழுமையாக முடங்கினால் சர்வதேச ஏற்றுமதி ஒப்பந்தங்கள் மற்றும் மருத்துவத் தேவைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்த தொழிலாளர்கள், வழக்கமான வேலைநிறுத்த முறை யைத் தவிர்த்தனர். மாறாக, 2026 ஏப்ரல் 23 அன்று ஆலை வாயில் எண் 1-ன் முன்பு தொடர் தர்ணா போராட்டத்தில் குதித்தனர். பணிக்குச் செல்லும் மற்றும் பணி முடிந்து வரும் தொழிலாளர்கள், ஆலைக்கு வெளியே சுழற்சி முறையில் ஒன்றிணைந்து இந்த அமைதியான அதே சமயம் உறுதியான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

நேரடிப் பேச்சுவார்த்தையும் எட்டப்பட்ட ஊதிய உயர்வும்

சர்வதேச சான்றிதழ்கள் மற்றும் ஏற்றுமதிப் பணிகளைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிர்வாகம், இறுதியில் தொழிலாளர் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. மே மாத இறுதி மற்றும் ஜூன் மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட ஊதிய உயர்வுகள் எட்டப்பட்டன:

• திறன் குறைந்த / தினசரி ஒப்பந்தத் தொழிலாளர்கள்: முன்பு ₹9,500 – ₹11,000 வரை இருந்த ஊதியம், தற்போது ₹11,500 – ₹13,000 ஆக உயர்த்தப்பட்டது.

• அரை-திறன் பெற்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள்: முன்பு ₹11,500 – ₹13,000 வரை இருந்தது, தற்போது ₹13,500 – ₹15,500 ஆக உயர்த்தப்பட்டது.

• திறன்மிகு நேரடிப் பணியாளர்கள்: முன்பு ₹14,500 – ₹18,000 வரை இருந்தது, தற்போது ₹16,500 – ₹20,500 ஆக உயர்த்தப்பட்டது.

மேலும், சுழற்சி முறை ஷிப்ட் அட்டவணைகளில் உரிய ஓய்வு இடைவெளிகள் வழங்கப்பட்டன. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் எவரும் வேலைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றஉறுதிமொழியும் நிர்வாகத்தால் வழங்கப்பட்டது. வேலைக்குத் தொடர்ச்சியாக வருகை தருவோரை ஊக்குவிக்கும்வகையில் சிறப்பு வருகைப் போனஸ் (Attendance Bonuses) மற்றும் மருத்துவ உற்பத்தி அலவன்சுகளும் அதிகரிக்கப்பட்டன.முழுமையான வேலை நிறுத்தமின்றி, முறையான திட்டமிடல் மற்றும் உறுதியான தர்ணா போராட்டம் மூலம் தங்களின்கோரிக்கைகளை வென்றெடுத்துள்ள பயோ-மெட் ஆலைத் தொழிலாளர்களின் போராட்டம், உத்தராகண்ட் தொழி லாளர்வரலாற்றில் ஒரு தனித்துவமான உதாரணமாகும்.தி லெப்ட் வியூஸ்