உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இரு சக்கர வாகனப்பேரணி
9 Apr 2026, 5:30 am

உளுந்தூர்பேட்டையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக இரு சக்கர வாகனப்பேரணி

உளுந்தூர்பேட்டை, ஏப்.8- கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை ஒன்றியம் எலவனாசூர் கோட்டை மில் மார்க்கெட்டில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்கக் கேட்டு இருசக்கர வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை ஒன்றியம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ஜி.ஆர். வசந்த வேலுவுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு பல்வேறு கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் நடைபெற்றது.

இதில் திமுக, சிபிஎம், விசிக, மதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.